மிகப் பெரிய ஜாக்பாட்டை சொந்தமாக்கிய சவுதி அரேபியா: அதிகாரிகள் சொன்ன விடயம்
சவுதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் 14 புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களைக் கண்டுபிடித்துள்ளதாக அந்த நாட்டின் முதன்மை எண்ணெய் நிறுவனமான அரம்கோ அறிவித்துள்ளது.
ஒப்பீட்டளவில் சிறியது
ஆனால் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயுவின் அளவு ஒப்பீட்டளவில் சிறியது என்றே அதிகாரிகள் தரப்பு கூறியுள்ளது. மொத்த கண்டுபிடிப்புகளில், ஆறு எண்ணெய் வயல்களிலும் இரண்டு தேக்கங்களிலும் வெவ்வேறு தரங்களில் எண்ணெய் உள்ளது என தெரிவித்துள்ளனர்.
இவை அனைத்தும் சேர்ந்து, ஒரு நாளைக்கு 8,126 பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளன. இந்தக் கண்டுபிடிப்பில் இரண்டு இயற்கை எரிவாயு வயல்கள் மற்றும் நான்கு எரிவாயு தேக்கங்களும் அடங்கும்.
இவை ஒரு நாளைக்கு சுமார் 80.5 மில்லியன் தரமான கன அடி எரிவாயுவை உற்பத்தி செய்ய முடியும். கூடுதலாக, எண்ணெய் தேக்கங்களுடன் இணைக்கப்பட்ட எரிவாயு 2.11 மில்லியன் SCFD வரை உற்பத்தி செய்யக்கூடும்.
பிப்ரவரியில், சவுதி அரேபியா ஒரு நாளைக்கு சுமார் 9 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்ததாக OPEC இன் மார்ச் மாத அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
267 பில்லியன் பீப்பாய்கள்
உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களில் சவுதி அரேபியாவும் ஒன்றாகும். அதன் முக்கிய எண்ணெய் வயல்களில் உலகின் மிகப்பெரிய கடலோர எண்ணெய் வயலான கவார் வயல் மற்றும் சஃபானியா எண்ணெய் வயல், மிகப்பெரிய கடல் எண்ணெய் வயல் என அறியப்படுகிறது.
இரண்டும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சவுதி அரம்கோவால் இயக்கப்படுகிறது. கடந்த 1938 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் முதன்முதலில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது, அதன் பின்னர், அந்த நாடு உலக எரிசக்தி சந்தையில் ஒரு முக்கிய பங்காளியாக மாறியுள்ளது.
இன்று, சவுதி அரேபியா உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் இருப்பைக் கொண்டுள்ளது, இது 267 பில்லியன் பீப்பாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலகளாவிய இருப்புக்களில் சுமார் 16–17 சதவீதமாகும். மட்டுமின்றி OPEC இன் மொத்த உறுதி செய்யப்பட்ட இருப்புக்களில் சுமார் 22 சதவீதமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |