வெளிநாட்டவர்களுக்கு மரணதண்டனை... மத்திய கிழக்கு நாடொன்றில் அதிகரித்த எண்ணிக்கை
இந்த ஆண்டு மட்டும் இதுவரை சவுதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 100 கடந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
101 வெளிநாட்டவர்களுக்கு
வெளியான தரவுகளின் அடிப்படையில், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்றே தெரிய வந்துள்ளது.
சவுதி அரேபியாவுக்கு போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட யேமன் நாட்டவர் ஒருவருக்கு நஜ்ரானின் தென்மேற்குப் பகுதியில் சனிக்கிழமையன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
2024ல் இதுவரை 101 வெளிநாட்டவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2023 மற்றும் 2022ஐ ஒப்பிடுகையில் இது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்றே கூறப்படுகிறது.
மேலும், ஆண்டுக்கு சராசரியாக 34 வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியா அதிக எண்ணிக்கையில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
2023ல் சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான மரணதண்டனையை நிறைவேற்றிய நாடாக சவுதி அறியப்படுகிறது. மேலும், 2024ல் இதுவரை சவுதி அரேபியா மொத்தமாக 274 பேர்களுக்கு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது.
இலங்கை, எரித்திரியா தலா ஒருவர்
2022ல் இந்த எண்ணிக்கை 196 எனவும், 1995ல் இந்த எண்ணிக்கை 192 எனவும் இருந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 21 பாகிஸ்தானியர்கள், யேமன் நாட்டவர் 20 பேர்கள், சிரியாவை சேர்ந்தவர்கள் 14 பேர், நைஜீரியா நாட்டவர்கள் 10 பேர், எகிப்திலிருந்து 9 பேர்கள்,
ஜோர்டானிலிருந்து 8 பேர்கள் மற்றும் எத்தியோப்பியாவிலிருந்து 7 பேர்கள், சூடான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தலா மூன்று பேரும், இலங்கை, எரித்திரியா மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து தலா ஒருவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் பொதுவாக மரணதண்டனை என்றால் தலையை வெட்டுவதாகாவே கூறப்படுகிறது. ஆனால் எந்த வகையான மரணதண்டனை என அறிக்கையில் சவுதி அரேபியா குறிப்பிடவில்லை. பெரும்பாலும், கொலை வழக்கு, போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கே மரணதண்டனை விதிக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |