அமெரிக்க வெள்ளை பருந்துக்கு கொட்டிய பணமழை! சவுதியில் களைகட்டிய சர்வதேச பருந்துகள் ஏலம்
சவுதி அரேபியா நாட்டில் நடந்த சர்வதேச பருந்து விற்பனை ஏலத்தில் அமெரிக்காவை சேர்ந்த பருந்து சுமார் 319,800 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகி அசத்தியுள்ளது.
சர்வதேச பருந்துகள் விற்பனை ஏலம்
சவுதி அரேபியாவின் ரியாத் வடக்கே மல்ஹாமில் நடைபெற்ற சர்வதேச பருந்துகள் விற்பனை ஏலம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
21 நாட்கள் நடைபெற்ற இந்த பருந்து ஏலத்தை சவுதி ஃபால்கன்ஸ் கிளப் நடத்திய நிலையில், இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பருந்து வளர்ப்பு பண்ணைகள் கலந்து கொண்டுள்ளன்.
அதிக விலைக்கு ஏலம் போன அமெரிக்க பருந்து
இந்த ஏலத்தில் அதிகபட்சமாக அமெரிக்காவை சேர்ந்த சூப்பர் ஒயிட் பியூர் கைர் ஃபர்கி(Super White Pure Gyr Farkh) என்ற பருந்து சுமார் $319,800 அமெரிக்க டொலர்கள் என்ற நம்ப முடியாத விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.
கடும் போட்டியை ஏற்பட்ட இந்த பருந்தை அமெரிக்காவின் RX பண்ணையில் வளர்க்கப்பட்டது ஆகும். இதையடுத்து பிரித்தானியாவின் பார்டர் ஃபால்கன்ஸ் பண்ணையின் ஷாஹீன் கைர் ஃபர்கி பருந்து(Shaheen Gyr Farkh) சுமார் $7400 அமெரிக்க டொலர்களுக்கும், பால்கன் மியூஸ் பண்ணையை சேர்ந்த மற்றொரு ஷாஹீன் கைர் ஃபர்கி பருந்து(Shaheen Gyr Farkh) $12,000 அமெரிக்க டொலர்களுக்கும் விற்பனையாகியுள்ளது.
இதன் மூலம் சனிக்கிழமை ஒரே நாளில் சுமார் $340,000 அமெரிக்க டொலர்கள் என்ற பெரும் விலைக்கு பருந்துகள் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன.
தொலைக்காட்சியில் நேரலை
4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட சர்வதேச பருந்துகள் விற்பனை ஏலத்தில், தற்போது பருந்துகள் விற்பனை நல்ல முன்னேற்றதை கண்டுள்ளது.
அத்துடன் இந்த நிகழ்வு தொலைக்காட்சிகள் மற்றும் நேரலையில் ஒளிப்பரப்படுவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |