சவுதி வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு திடீர் பயணம்: ஈரான் வெளியுறவு அமைச்சரும்
இந்தியா, பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், திடீரென முன்னறிவிப்பு எதுவுமின்றி சவுதி வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளார்.
சவுதி வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு திடீர் பயணம்
சவுதி வெளியுறவு அமைச்சரான Adel al-Jubeir, இந்தியாவுக்கு திடீர் வருகை புரிந்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், சவுதி அமைச்சர் திடீரென இந்தியா வந்துள்ளதால் அவரது வருகை கவனம் ஈர்த்துள்ளது.
என்றாலும், அவர் எதற்காக வந்தார் என்பது குறித்த எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.
A good meeting with @AdelAljubeir, Minister of State for Foreign Affairs of Saudi Arabia this morning.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 8, 2025
Shared India’s perspectives on firmly countering terrorism.
🇮🇳 🇸🇦 pic.twitter.com/GGTfItZ3If
அது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சரான S. ஜெய்ஷங்கர், சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், இன்று காலை சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சரான Adel al-Jubeirஉடன் ஒரு நல்ல சந்திப்பு நிகழ்ந்தது.
பயங்கரவாதத்தை உறுதியாக எதிர்ப்பது குறித்த இந்தியாவின் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொண்டோம், என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சரான Abbas Araghchiயும் நேற்று நள்ளிரவு இந்தியா வந்துள்ளார்.
அவரும் இந்திய வெளியுறவு அமைச்சரான S. ஜெய்ஷங்கரை சந்திக்க உள்ளார்.
ஈரானைப் பொருத்தவரை, இந்தியா பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய அந்நாடு விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |