போனில் இருந்து பல புகைப்படங்கள்... பெற்றோருக்கு தெரியாமல் இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி! கொந்தளிக்கும் மனித உரிமைகள் குழு

Death penalty
By Basu Jun 16, 2021 06:25 AM GMT
Report

சவுதியில் 17 வயதில் குற்றச்செயலில் ஈடுபட்டவருக்கு 26 வயதில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2015 ஆம் ஆண்டு போராட்டம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட Mustafa Hashem al-Darwish என்ற இளைஞருக்கு சவுதி மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.

2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் 10-க்கும் மேற்பட்ட வன்முறை போராட்டங்களில் Mustafa Hashem al-Darwish பங்கேற்றது மற்றும் பாதுகாப்பு படையினருக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டதற்கான புகைப்படங்கள் அவரின் போனில் இருந்தாக கூறப்படுகிறது.

அந்த படங்களை ஆதாரமாக வைத்து சவுதி பொலிசார் 2015 ஆம் ஆண்டு அவரை கைது செய்துள்ளனர்.

Darwish மீது தீவிரவாத குழுவை உருவாக்கி ஆயுதமேந்திய கிளர்ச்சியை மேற்கொள்ள முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டதாக சவுதி அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.

இந்நிலையில், சிறார்களுக்கு மரண தண்டனையை ரத்து செய்ததாக சவுதி உறுதியளித்த போதிலும், Darwish 17 வயதில் செய்த குற்றத்திற்கு தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது அநியாயம் என மனித உரிமைகள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், மரண தண்டனை நிறுத்த வேண்டும் என அழைப்பு விடுத்திருந்த மனித உரிமைகள் குழு, விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என குற்றம்சாட்டியிருந்தது நினைவுக் கூரத்தக்கது.

முதலில் குற்றத்தை ஒப்புக்கொண்ட Darwish, பின்னர் அதிகாரிகள் தன்னை துன்புறுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்ததாக உண்மையை உடைத்தார். எனினும், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சவுதி அதிகாரிகள் எந்த விளக்கமும் அளிக்காமல் மௌனம் காத்தனர்.

இந்நிலையில், Dammam நகரில் Darwish-க்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என சவுதி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Darwish-க்கு மரண தண்டனை நிறைவேற்றப்போவது குறித்து தங்களுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

போனில் இருந்து பல புகைப்படங்கள்... பெற்றோருக்கு தெரியாமல் இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி! கொந்தளிக்கும் மனித உரிமைகள் குழு | Saudi Man Executed For Crimes Committed As A Minor

சிறார்களுக்கு மரண தண்டனை ரத்து செய்ததாக அறிவத்த சவுதி அரசு, தற்போது 17 வயதில் செய்த குற்றத்திற்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது சர்வதேச சமூகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US