ஹார்முஸ் நீரிணையில் சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல்
Saudi oil tankers attacked in Hormuz Strait: ஹார்முஸ் நீரிணையில் சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல்
மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் சவுதி எண்ணெய் ஏற்றிச் சென்ற இரண்டு பெரிய கப்பல்கள் தாக்கப்பட்டதாக சர்வதேச கடல் பாதுகாப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

திங்கட்கிழமை இரவு, சவுதி அரேபியக் கொடியுடன் சென்ற “Sidr” என்ற எண்ணெய் கப்பலும், லைபீரியா கொடியுடன் சென்ற “Senegal Prosperity” என்ற எண்ணெய் கப்பலும், ஓமன் கடற்கரைக்கு அருகில் சில நிமிட இடைவெளியில் தாக்கப்பட்டன.
மூன்று ஏவுகணைகள் தாக்கியதாகவும், கப்பலின் இயந்திர அறை மற்றும் பக்கவாட்டில் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இரண்டு கப்பல்களும் கடந்த வாரம் சவுதி அரேபியாவின் Juaymah terminal-இல் இருந்து சுமார் 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றிருந்தன.
தாக்குதலுக்குப் பிறகு, கப்பல் குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் அல்லது சுற்றுச்சூழல் பாதிப்புகள் எதுவும் இல்லை.
தாக்குதல் பின்னணி
இந்த தாக்குதல், அமெரிக்கா-இரான் இடையேயான பதற்றத்தின் பின்னணியில் நடந்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா மற்றும் ஈரான் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த முயற்சித்து வருகின்றன.
ஈரான், “கட்டணம் செலுத்தாமல் செல்லும் கப்பல்களை” தடுத்து நிறுத்துவதாக எச்சரித்துள்ளது.
எண்ணெய் விலைவு
அதே சமயம், அமெரிக்கா ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்குப் பிறகு, உலகளாவிய எண்ணெய் விலை 1.7 சதவீதம் உயர்ந்து, Brent crude பீப்பாய்க்கு 92 டொலர் என்ற அளவுக்கு சென்றுள்ளது.
ஹார்முஸ் நீரிணை உலகின் எண்ணெய் போக்குவரத்து பாதையில் மிக முக்கியமானது. உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த கடல்பாதையின் வழியாக செல்கிறது. எனவே, இந்த தாக்குதல் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |