இனி பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்டால்... களமிறங்கும் ஒரு வலுவான வளைகுடா நாடு
சவுதி அரேபியாவும் அணு ஆயுத சக்தியாக அடையாளப்படுத்தப்படும் நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானும் முறையான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அமெரிக்காவின் நம்பகத்தன்மை
அதிகரித்த பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் பல தசாப்த கால பாதுகாப்பு கூட்டாண்மையை கணிசமாக வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.
வளைகுடா அரபு நாடுகள் தங்கள் நீண்டகால பாதுகாப்பு உத்தரவாதமாக கருதப்படும் அமெரிக்காவின் நம்பகத்தன்மை குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருப்பதால், இப்படியான பாதுகாப்பு உறவுகள் முன்னெடுக்கப்படுகிறது.
மட்டுமின்றி, அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ முகாம் கத்தாரில் அமைந்திருந்தும் கடந்த வாரம் இஸ்ரேல் அதிரடி தாக்குதலை முன்னெடுத்த நிலையில், வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு கவலைகளும் அதிகரித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடர்பில் சவுதியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இந்த ஒப்பந்தமானது பல வருட விவாதங்களின் உச்சமாகும். இது குறிப்பிட்ட நாடுகளுக்கோ அல்லது குறிப்பிட்ட சம்பவங்களுக்கோ ஆன பதில் அல்ல,
இந்தியாவிற்கும் நெருக்கடி
மாறாக எங்களின் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் ஆழமான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும் என்றார். இஸ்ரேல் போர் நிறுத்தம் தொடர்பில் கத்தாரில் ஆலோசனையில் ஈடுபட்டு வந்த ஹமாஸ் அரசியல் தலைவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது அரபு நாடுகளை கொதிப்பஃபைய செய்துள்ளது.
தற்போது சவுதி அரேபியாவும் பாகிஸ்தானும் முன்னெடுத்துள்ள இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கும் நெருக்கடியை அளிக்கும் என்றே கூறப்படுகிறது. மே மாதம் பாகிஸ்தான் தனது எதிரியாக கருதும் இந்தியாவுடன் ஒரு சிறிய இராணுவ மோதலை நடத்திய சில மாதங்களுக்குப் பிறகு சவுதியுடன் ஒப்பந்தம் முன்னெடுத்துள்ளது.
மேலும் இந்தியா போலன்றி, துருக்கி மற்றும் சீனாவுடன் நெருக்கமான உறவை முன்னெடுத்துவரும் பாகிஸ்தான், இந்த இரு நாடுகளில் இருந்தும் இராணுவ உதவிகளையும் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |