சவுதியில் புதிய கட்டுப்பாடுகள் அமுல்! வெளியான முக்கிய அறிவிப்பு
சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசாங்கம் மீண்டும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
டிசம்பர் 30ம் திகதி வியாழக்கிழமை முதல் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் நடக்கும் நிகழ்வுகளில் சமூக இடைவெளி வழிகாட்டுதல்கள் கடைபிடிப்பது மற்றும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உள்துரை அமைச்சக வட்டாரத்தை மேற்கோள் காட்டி Saudi Press Agency வெளியிட்ட அறிவிப்பில், புதிய மாறுபாடு மற்றும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் நாட்டின் சுகாதார அதிகாரிகள் இந்த முடிவை எடுத்தாக தெரிவித்துள்ளது.
உள்ளூர் மற்றும் உலகளாவிய சூழ்நிலையின் அடிப்படையில் அனைத்து நடைமுறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தொடர்ச்சியான மறுபரிசீலயைக்கு உட்படுத்துப்படும் என உள்துரை அமைச்சக வட்டாரம் சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கத் தவறியதற்காக, சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக சவுதி அரேபியாவில் வாழும் மக்கள் புதிய நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.