ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள சவூதி அரேபியா
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சவுதி அரேபியா ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
சமீபத்தில் வளைகுடா நாடுகள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என சவுதி அரசு வலியுத்தியுள்ளது.
சவுதி வெளிவிவகார அமைச்சர் பிரின்ஸ் பைசல் பின் ஃபர்ஹான், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் நேரடியாக பேசியுள்ளார்.
அவர்களது உரையாடலில், "தூதரக வழியே பிரச்சினையை தீர்க்க விரும்புகிறோம். ஆனால், எங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி வளங்கள் மீண்டும் தாக்கப்பட்டால், கடுமையான பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்" என ஃபர்ஹான் தெரிவித்துள்ளார்.

இரான் ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியன், வளைகுடா நாடுகளிடம் மன்னிப்பு கேட்டு, பதற்றத்தை குறைக்க முயன்றாலும், தாக்குதல்கள் தொடர்ந்ததால் சவூதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சவுதி அரேபியா உலகின் மிகப் பாரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக இருப்பதால், எரிசக்தி துறையில் தாக்குதல் நடந்தால், உலகளாவிய எண்ணெய் விலைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதனால், வளைகுடா நாடுகள் அனைத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருகின்றன.
இந்த எச்சரிக்கை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய போர் சூழலை உருவாகக்கூடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Saudi Arabia Iran conflict, Saudi retaliation warning, Middle East tensions 2026, Iran Saudi Arabia relations #SaudiArabia #Iran #MiddleEast #GulfConflict