மின்னல் வேகத்தில் முன்னேறும் ஹவுதிகள்... எண்ணெய் குழாய் வழித்தடத்தை மூடிய சவுதி

Donald Trump Saudi Arabia Yemen
By Arbin Sep 12, 2026 03:20 AM GMT
Report

Saudis shut down oil pipeline: ஹவுதிகளால் எண்ணெய் குழாய் வழித்தடத்தை மூடிய சவுதி அரேபியா.

மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் போரின் ஒரு பகுதியாக, மிக முக்கியமான எண்ணெய் வழித்தடமான 'கிழக்கு-மேற்கு' குழாய் வழித்தடம் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, சவுதி அரேபியா அதனை மூடியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் செயல்படும் ஈராக்கில் இருந்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈராக்கும் சவுதி அரேபியாவும் தெரிவித்ததை அடுத்து, உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, குழாய்வழியை தற்காலிகமாக மூடியது.

மின்னல் வேகத்தில் முன்னேறும் ஹவுதிகள்... எண்ணெய் குழாய் வழித்தடத்தை மூடிய சவுதி | Saudis Shut Down Oil Pipeline

அரேபிய தீபகற்பம் முழுவதும் செல்லும் 745 மைல் நீளமுள்ள இந்தக் குழாய்த்தொடர், ஹார்முஸ் நீரிணையில் நிலவும் கப்பல் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்துச் செல்ல சவுதி அரேபியாவுக்கு உதவியது; அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரின் காரணமாக அந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்து மிகக் குறைவாகவே நடைபெற்று வருகிறது.

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த எரிபொருள் குழாய் வழித்தடத்தை மூடியுள்ளதாக சவுதி எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு நிறுவனங்கள் மற்றும் ஆய்வாளர்களின் தகவல்படி, கடந்த சில மாதங்களாக இக்குழாய் வழித்தடம் வழியாக நாளொன்றுக்கு 40 முதல் 50 லட்சம் பீப்பாய் எரிபொருள் கொண்டு செல்லப்பட்டு வந்தது; இது உலகளாவிய விநியோகத்தில் 4 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை என்றே கூறப்படுகிறது.

செங்கடல் துறைமுகத்தைக் கைப்பற்றிய ஹவுதிகள்... உயரும் கச்சா எண்ணெய் விலை

செங்கடல் துறைமுகத்தைக் கைப்பற்றிய ஹவுதிகள்... உயரும் கச்சா எண்ணெய் விலை

ஏமனில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதிகள் செங்கடலில் தங்கள் பிடியை இறுக்கியுள்ள சூழலில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது; ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுடன் இந்தச் சூழலும் இணைந்து, அரேபியத் தீபகற்பத்தின் இரு பகுதிகளிலும் எரிசக்தி விநியோகத்தில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய கச்சா எண்ணெய் விலையை மீண்டும் ஒரு பீப்பாய்க்கு 100 டொலருக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது.

இந்த நிலையில், மின்னல் வேகத்தில் முன்னேறும் ஹவுதிகள் செங்கடலின் நுழைவாயிலில், பாப் அல்-மண்டேப் நீரிணையில் அமைந்துள்ள அதி முக்கியத்துவம் வாய்ந்த பெரிம் தீவை வெள்ளிக்கிழமையன்று கைப்பற்றினர்.

பரந்த அளவிலான நடவடிக்கை

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் முடங்கியுள்ள நிலையில், சவுதி குழாய்வழித்தடம் மற்றும் பெரிம் தீவு மீது வெள்ளிக்கிழமை அன்று நடந்ததாகப் பதிவான இரட்டைத் தாக்குதல்கள், ஒரு அபாயகரமான பதற்ற அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, போரின் காரணமாக உயர்ந்த எரிபொருள் விலைகள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது குடியரசுக் கட்சிக்கு அரசியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இராணுவ உதவி கோரி சவுதி அரேபியா ட்ரம்ப் நிர்வாகத்தை அணுகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்னல் வேகத்தில் முன்னேறும் ஹவுதிகள்... எண்ணெய் குழாய் வழித்தடத்தை மூடிய சவுதி | Saudis Shut Down Oil Pipeline

ஆனால், வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், சவுதி பட்டத்து இளவரசர் பின் சல்மானின் கோரிக்கையை ஜனாதிபதி ட்ரம்ப் நிராகரித்துள்ளார் என்றே தெரிய வருகிறது.

சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் மதீனா பகுதிகளில் உள்ள கிழக்கு-மேற்கு குழாய் வழித்தடம் வியாழக்கிழமை காலை தாக்கப்பட்டதாக சவுதி எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, குழாய் வழித்தடத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டறியும் வகையில் பரந்த அளவிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவே தகவல் கசிந்துள்ளது.

ஹவுதிகள் பாப்-எல்-மண்டேப் நீரிணையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினால், அவர்களுக்கு ஆதரவளிக்கும் ஈரானானது அமெரிக்காவுடனான போரில் ஒரு முக்கிய சாதகமான நிலையைப் பெறக்கூடும்.

ஏமன் உள்நாட்டுப் போரின்போது சவுதி அரேபியாவின் கடுமையான வான்வழித் தாக்குதல்களைத் தாக்குப் பிடித்து நின்ற மலைப்பகுதிப் போராளிகளான ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை, செங்கடல் கடற்கரையோரத்தில் இந்த வாரம் மேற்கொள்ளப்படும் மின்னல் வேகத் தாக்குதலின் மூலம் மீண்டும் கைப்பற்ற முயற்சிப்பதாக ஏமன் அரசுப் படைகள் தெரிவித்துள்ளன.

மின்னல் வேகத்தில் முன்னேறும் ஹவுதிகள்... எண்ணெய் குழாய் வழித்தடத்தை மூடிய சவுதி | Saudis Shut Down Oil Pipeline

இதனிடையே, ஏமனின் செங்கடல் கடற்கரைப் பகுதியில் ஹவுதிகள் மேற்கொண்ட அதிரடி முன்னேற்றமானது, ஈரானின் புரட்சிகரப் படைகளின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது என்றே தெரிய வருகிறது.

ஹவுதிகளுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவின் ராணுவ உதவியைக் கோருவதற்காக, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் வியாழக்கிழமையன்று குறைந்தது இருமுறை ட்ரம்ப்பைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

ஏற்கனவே ஈரான் போரில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவிக்கும் ட்ரம்ப் நிர்வாகம், தற்போதைக்கு நேரடி ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாராக இல்லை என்றும், ஆனால் உளவுத் தகவல் பகிர்வு மற்றும் இலக்குகளைக் கண்டறிதல் ஆகியவற்றில் உதவுவதாக மட்டும் சவுதியிடம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US