தினமும் ரூ.75 சேமியுங்கள்- ரூ.14 லட்சம் பெறுங்கள்
தினமும் ரூ.75 சேமித்தால் வயது முதிர்வின் போது ரூ.14.5 லட்சம் பெறும் LIC-யின் பாலிசி குறித்து தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
எல்ஐசி கன்யாடன் பாலிசி
வங்கிகள், நிதிநிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவை மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல சேமிப்பு திட்டங்களை கொண்டு வருகின்றன.
திருமணம், கல்வி, சேமிப்பு என அனைத்து தேவைகளுக்கும் திட்டங்கள் ஏற்கனவே புழக்கத்தில் உள்ளன.
அந்த வகையில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான LIC, பெண் குழந்தைகளுக்காக எல்ஐசி கன்யாடன் பாலிசி என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
பெண் குழந்தைகளுக்கான திட்டம்
கடினமான காலங்களில் பெண் குழந்தைகளுக்கு உதவுவது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு இந்த திட்டம் உதவுகிறது. பெண் குழந்தைகளின் தந்தைகள் இந்த பாலிசியை எடுக்கலாம். ஆனால், மகளின் வயது 1 ஆக இருக்க வேண்டும். தந்தையின் வயது 18 முதல் 50க்குள் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்திற்கான காலம் மொத்தம் 25 ஆண்டுகள், குறைந்தபட்ச காலம் 13 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டமானது, தந்தையின் மரணத்திற்கு பிறகு மகளுக்கு வழங்கப்படுகிறது.
பாலிசியின் சிறப்பு என்ன?
- ஒருவேளை தந்தை இறந்து விட்டால், பிரீமியம் செலுத்த வேண்டாம். அதன் பின்னர், எல்ஐசி பிரீமியத்தை செலுத்திவிடும்.
- இயற்கையான காரணங்களால் பயனாளர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் காப்பீடு கிடைக்கும்.
- விபத்தின் மூலம் பயனாளர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் காப்பீடு கிடைக்கும்.
- 25 ஆண்டுகள் முடிந்த பிறகு பாலிசி நாமினி ரூ.27 லட்சமான மொத்த தொகையை பெறலாம். எல்ஐசி கன்யாடன் பாலிசியானது NRI உள்பட அனைத்து இந்தியர்களுக்கும் பொருந்தும்.
- 3 ஆண்டுகள் தொடர்ந்து பாலிசியை செலுத்தினால், பாலிசி அடிப்படையில் கடன் பெறலாம்.
- பாலிசியின் பிரீமியங்களை மாதம், ஆண்டு, காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம்.
- தினமும் ரூ.75 டெபாசிட் செய்வதன் மூலம் உங்களின் மகளின் திருமணத்திற்காக ரூ.14 லட்சம் சேமிக்கலாம்.
- தினமும் ரூ.131 வீதம் சேமித்தால் முதிர்வின்போது ரூ.31 லட்சம் பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |