SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்?
எஸ்பிஐ வங்கியின் புதுப்பிக்கப்பட்ட தங்க வைப்புத் திட்டத்தை (R-GDS) பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
SBI Gold Deposit Scheme
புதுப்பிக்கப்பட்ட தங்க வைப்புத் திட்டம் (R-GDS) என்பது எஸ்பிஐ திட்டமாகும். இதில் நீங்கள் வட்டியைப் பெற உங்கள் செயலற்ற தங்கத்தை டெபாசிட் செய்யலாம்.
இந்திய அரசாங்கம் 1999 இல் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. பின்னர், இந்தத் திட்டம் 2015 இல் புதுப்பிக்கப்பட்ட தங்க வைப்புத் திட்டமாக மீண்டும் தொடங்கப்பட்டது.
R-GDS இன் நன்மைகள்
* செயலற்ற தங்கத்தை உற்பத்தி நோக்கங்களுக்காக பயன்படுத்துதல்.
* தனிநபர்கள் தங்களுடைய செயலற்ற தங்கத்தின் மீது வட்டி சம்பாதிக்க உதவுகிறது.
* குடும்பங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சொந்தமான தங்கத்தை பணமாக்குதல்.
எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?
வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தை தொடங்க விண்ணப்பப் படிவம், அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் இருப்புப் படிவம் ஆகியவற்றை அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட கிளையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும், எஸ்பிஐ தங்க வைப்புத் திட்டத்தின் முழு விவரங்களைப் பற்றி தெரிந்துகொள்ள எஸ்பிஐ இணையதளத்தைப் பார்வையிடலாம்.
டெபாசிட் வரம்பு
இந்த திட்டத்தை தொடங்க, குறைந்தபட்சம் 30 கிராம் தங்கத்தை வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்ய வேண்டும். அதிகபட்ச டெபாசிட் வரம்பு இல்லை.
டெபாசிட் முறை
R-GDS இல் 3 வகையான டெபாசிட் முறை உள்ளது.
1. குறுகிய கால வங்கி டெபாசிட்டின் (STBD) காலக்கட்டம் குறைந்தபட்சம் 1 ஆண்டு முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள்.
2. நடுத்தர கால அரசு டெபாசிட்டின் (MTGD) காலக்கட்டம் 5-7 ஆண்டுகள்.
3. நீண்ட கால அரசு டெபாசிட்டின் (LTGD) காலக்கட்டம் 12-15 ஆண்டுகள்.
MTGD மற்றும் LTGD வைப்பு, மத்திய அரசின் சார்பாக வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படும்.
முக்கியமாக தங்கக் கட்டிகள், தங்க காசுகள், நகைகள் ஆகிய வடிவத்தில் தங்கம் ஏற்றுக் கொள்ளப்படும். தங்க கல் மற்றும் இதர வடிவத்தில் தங்கம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
வட்டி?
குறுகிய கால வங்கி டெபாசிட் (STBD) கீழ் முதல் வருடத்தில் 0.50 சதவிகிதம் வட்டியும், 2வது வருடத்தில் 0.55 சதவிகிதம் வரை வட்டியும், மூன்று வருடத்தில் 0.60 சதவிகிதம் வரை வட்டியும் கிடைக்கும்.
நடுத்தர கால அரசு டெபாசிட்டில் (MTGD) 5-7 ஆண்டுகளுக்கு, வருடத்திற்கு 2.25 சதவிகதம் வட்டி கிடைக்கும்.
நீண்ட கால அரசு டெபாசிட்டில் (LTGD) 12-15 ஆண்டுகளுக்கு, வருடத்திற்கு 2.50 சதவிகதம் வட்டி கிடைக்கும்.

SBI, HDFC வங்கி FD-ல் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு தொகை கிடைக்கும்?
R-GDS இல் உருவாக்கப்படும் வட்டி தங்க வடிவில் (கிராம்கள்) அல்லது ரூபாயில் செலுத்தப்படுகிறது. குறுகிய கால முதலீடுகள் (STBD) தங்கம் அல்லது இந்திய ரூபாயில் வட்டி மற்றும் அசலை செலுத்துகின்றன.
இருப்பினும், நடுத்தர மற்றும் நீண்ட கால முதலீடுகளுக்கு (MTGB மற்றும் LTGD), வட்டி மற்றும் அசல் இரண்டும் ரொக்கமாக செலுத்த வேண்டும். மீட்பது தங்க வடிவில் இருந்தால், 0.20 சதவீதம் நிர்வாகக் கட்டணம் விதிக்கப்படும்.
முதிர்வு தொகை?
நீங்கள் இந்த திட்டத்தில் 10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால், உங்கள் முதிர்வுத் தொகை ரூ.11,18,720 ஆக இருக்கும்.
இதுவே ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை டெபாசிட் செய்தால், முதிர்வுத் தொகை ரூ.16,78,079 ஆக இருக்கும்.
அதேபோல ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 15 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால், முதிர்வுத் தொகை ரூ.14,00,115 ஆக இருக்கும். ரூ.15 லட்சம் டெபாசிட்டுக்கு முதிர்வுத் தொகை ரூ.21,00,172 ஆக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |