SBI Lakhpati RD திட்டம்.., ரூ.5 லட்சம் கிடைக்க வேண்டும் என்றால் மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
SBI Lakhpati RD திட்டத்தின் வட்டி விகிதம் மற்றும் பயன்கள் பற்றிய முழுமையான விவரங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
SBI’s Har Ghar Lakhpati scheme
பாரத ஸ்டேட் வங்கி எதிர்கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு சிறப்பு RD திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த வைப்புத் திட்டத்திற்கு ஹர் கர் லக்பதி (Har Ghar LakhPati) என்று பெயரிடப்பட்டுள்ளது.
நடுத்தர வர்க்கம் மற்றும் அதற்கு மேல் வருமானம் உள்ள குடும்பங்களின் எதிர்கால நிதி தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு சிறப்பு RD திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
Har Ghar LakhPati திட்டம் என்பது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1,00,000 அல்லது அதன் மடங்குகளைக் குவிப்பதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு முன்கணக்கிடப்பட்ட தொடர் வைப்பு (RD) திட்டமாகும்.
இந்தத் திட்டம் நிதி இலக்குகளை அடைவதை எளிதாக்குகிறது. மேலும், வாடிக்கையாளர்களை திறம்பட சேமிக்க அனுமதிக்கிறது.
இதில், வாடிக்கையாளர்கள் தங்கள் சிறுசேமிப்புகளை மாதந்தோறும் முதலீடு செய்து, லட்சக்கணக்கான மதிப்பிலான நிதியை சேகரிக்கலாம். இந்த திட்டத்தில் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்த திட்டத்தில் 3 முதல் 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். இதில், ஒவ்வொரு மாதமும் உங்கள் சேமிப்பில் ஒரு பகுதியை தவறாமல் முதலீடு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்கள் பணம் வட்டியுடன் திருப்பித் தரப்படும்.
இத்திட்டத்தில் 10 வயது வரை உள்ள குழந்தைகளும் விண்ணப்பிக்கலாம். அதே நேரத்தில், மூத்த குடிமக்களும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
வட்டி விகிதம்
ஹர் கர் லக்பதி திட்டம் முதிர்வு காலத்திற்கு ஏற்ப வெவ்வேறு வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளது. பொது குடிமக்களுக்கான வட்டி விகிதம் 3 மற்றும் 4 ஆண்டுகளுக்கு 6.75 சதவீதமாகவும், 5 முதல் 10 ஆண்டுகளுக்கு 6.50 சதவீதமாகவும் உள்ளது.
அதே சமயம் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 3 மற்றும் 4 ஆண்டுகளுக்கு பொது குடிமக்களுக்கான 7.25 சதவீதமாகவும், 5 முதல் 10 ஆண்டுகளுக்கு 7 சதவீதமாகவும் உள்ளது.
ரூ.5 லட்சம் - 3 ஆண்டுகள்
இந்த திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் கிடைக்க வேண்டும் என்றால், பொது குடிமக்கள் 3 ஆண்டுகளில் மாதம் தோறும் 12,506.10 முதலீடு செய்ய வேண்டும்.
இதுவே மூத்த குடிமக்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் கிடைக்க வேண்டும் என்றால், 3 ஆண்டுகளில் மாதம் தோறும் 12,408.55 முதலீடு செய்ய வேண்டும்.
ரூ.5 லட்சம் - 5 ஆண்டுகள்
இந்த திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கிடைக்க வேண்டும் என்றால், பொது குடிமக்கள் மாதம் தோறும் 7,043.16 முதலீடு செய்ய வேண்டும்.
இதுவே மூத்த குடிமக்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் கிடைக்க வேண்டும் என்றால், 5 ஆண்டுகளில் மாதம் தோறும் 6,950.93 முதலீடு செய்ய வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |