SBI Special RD Scheme அறிமுகம்.., பணத்தை குவிக்க உதவும் திட்டம் தெரியுமா?
பாரத ஸ்டேட் வங்கி எதிர்கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு சிறப்பு RD திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
Har Ghar LakhPati திட்டம்
பாரத ஸ்டேட் வங்கி எதிர்கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு சிறப்பு RD திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த வைப்புத் திட்டத்திற்கு ஹர் கர் லக்பதி (Har Ghar LakhPati) என்று பெயரிடப்பட்டுள்ளது.
நடுத்தர வர்க்கம் மற்றும் அதற்கு மேல் வருமானம் உள்ள குடும்பங்களின் எதிர்கால நிதி தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு சிறப்பு RD திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தவிர, 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக பேட்ரான் (Patron Scheme) என்ற புதிய திட்டத்தையும் எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில், Har Ghar LakhPati திட்டம் என்பது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1,00,000 அல்லது அதன் மடங்குகளைக் குவிப்பதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு முன்கணக்கிடப்பட்ட தொடர் வைப்பு (RD) திட்டமாகும்.
இந்தத் திட்டம் நிதி இலக்குகளை அடைவதை எளிதாக்குகிறது. மேலும், வாடிக்கையாளர்களை திறம்பட சேமிக்க அனுமதிக்கிறது.
இந்த RD திட்டத்தின் குறைந்தபட்ச காலம் 12 மாதங்கள் (ஒரு வருடம்) மற்றும் அதிகபட்சம் 120 மாதங்கள் (10 ஆண்டுகள்) ஆகும்.
ஆரம்பத்தில் இருந்தே குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்கு நிதி திட்டமிடல் பயிற்சி அளிக்கவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
RD திட்டமானது நிலையான வைப்புத்தொகைகளில் (fixed deposits) வழங்கப்படுவது போன்ற வட்டி விகிதங்களை வழங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |