SBI Debit Card சேவை கட்டணம் அதிகரிப்பு.., எந்தெந்த கார்டுகளுக்கு எவ்வளவு உயர்ந்துள்ளது?
ஏப்ரல் 1 -ம் திகதி முதல் எஸ்பிஐ வங்கி டெபிட் கார்டுகளுக்கான (SBI Debit Card) வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தை (annual maintenance charges) அதிகரித்தது.
எஸ்பிஐ டெபிட் கார்டுகளான கிளாசிக் (Classic), சில்வர் (Silver), குளோபல் (Global), பிளாட்டினம் (Platinum ) மற்றும் கான்டாக்ட்லெஸ் (Contactless) உள்ளிட்ட Debit Card -களுக்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணங்களை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டது.
யுவா (Yuva), கோல்ட் (Gold) மற்றும் காம்போ டெபிட் கார்டுகளுடன் (Combo Debit Card) கூடிய கிளாசிக், சில்வர், குளோபல், பிளாட்டினம் மற்றும் காண்டாக்ட்லெஸ் உள்ளிட்ட பல்வேறு வகை டெபிட் கார்டுகளுக்கு இந்த திருத்தம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் உயர்வு
* Classic, Silver, Global, Contactless Debit Card -களுக்கு தற்போது இருக்கும் வருடாந்திர பராமரிப்பு கட்டணம் ரூ.125 + GST -லிருந்து ரூ.200 + GST ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* Yuva, Gold, Combo Debit Card, My Card -களுக்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணங்கள் ரூ.175 + GST -யிலிருந்து ரூ.250 + GST ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* SBI Platinum debit card -களுக்கு தற்போது இருக்கும் வருடாந்திர பராமரிப்பு கட்டணம் ரூ.250 + GST -யில் இருந்து ரூ.325 + GST ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* Pride Premium Business Debit Card -களுக்கு ரூ.350 + GST -யிலிருந்து ரூ.425 + GST ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* Debit Card -யை மாற்றுவது போன்ற சேவைகளுக்கான கட்டணங்கள் ரூ.300 + GST எனவும், Debit Card PIN மாற்றுவதற்கு ரூ.50 + GST எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI Debit Card | தற்போதுள்ள கட்டணங்கள் | ஏப்ரல் 1, 2024 முதல் புதிய கட்டணங்கள் |
Classic /Silver/Global/Contactless Debit Cards | ரூ.125/ +GST | ரூ.200 + GST |
Yuva/Gold/Combo Debit Card/My Card (Image Card) | ரூ.175 + GST | ரூ.250 + GST |
Platinum Debit Card | ரூ.250 + GST | ரூ.325 + GST |
Pride/Premium Business Debit Card | ரூ.350 + GST | ரூ.425 + GST |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |