SBI வங்கியில் Salary Package Account-ல் இத்தனை நன்மைகளா., கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க...
பொதுவாக ஒவ்வொருவருக்கும் வங்கிகளில் கணக்குகள் இருக்கும். தற்போது ஓன்லைன் பரிவர்த்தனை அதிகரித்துள்ளதால் அனைவரும் வங்கிக் கணக்குகளை திறக்கின்றனர்.
அரசின் பல்வேறு திட்டங்களின் நிதியும் நேரடியாக வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.
வங்கி விதிமுறைகளின்படி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும். ஏடிஎம் போன்றவற்றுக்கான பராமரிப்புக் கட்டணங்களையும் நீங்கள் செலுத்த வேண்டும்.
சம்பள பேக்கேஜ் கணக்குகள் (Salary Package Account)
சம்பள பேக்கேஜ் கணக்குகள் என்பது மற்ற வங்கிக் கணக்குகளிலிருந்து மாறுபட்டதாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் சம்பளம் பெறும் ஊழியர்களுக்காக அவை தொடங்கப்பட்டுள்ளன.
வழக்கமான வாடிக்கையாளர்களுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கு சில கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியும் (SBI) இந்தக் கணக்குகளை வழங்குகிறது. அதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
சம்பள கணக்குகள் ஊழியர்களின் வங்கி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நிதி மேலாண்மை சீரமைக்கப்பட்டு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
SBI சம்பள கணக்கு நன்மைகள்
இது ஜீரோ பேலன்ஸ் கணக்கு (Zero Balance Accout)
மாதாந்திர இருப்புக் கட்டணங்கள் எதுவும் இல்லை
ஆட்டோ ஸ்வீப் வசதி (விரும்பினால்)
சிறப்பு சலுகைகளுடன் இலவச Debit Card
நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ மற்றும் பிற வங்கிகளின் ATM-களில் வரம்பற்ற பரிவர்த்தனைகள்
Demand Draft மீதான வெளியீட்டு கட்டணங்கள் தள்ளுபடி
பல நகர காசோலைகளுக்கு மாதத்திற்கு 25 வரை வழங்கல் கட்டணங்கள் தள்ளுபடி
Online RTGS/NEFT கட்டணங்கள் தள்ளுபடி
இலவச தனிநபர்/ விமான விபத்து காப்பீடு
தனிநபர் மற்றும் கார் கடன்களுக்கான அனுமதி
தகுதிக்கு ஏற்ப ஓவர் Overdraft வசதி
வருடாந்திர Locker வாடகைக் கட்டணத்தில் சலுகை
SBI வழங்கும் சம்பள பேக்கேஜ்கள்
CENTRAL GOVERNMENT SALARY PACKAGE (CGSP)
STATE GOVERNMENT SALARY PACKAGE (SGSP)
RAILWAY SALARY PACKAGE (RSP)
DEFENCE SALARY PACKAGE (DSP)
CENTRAL ARMED POLICE SALARY PACKAGE (CAPSP)
POLICE SALARY PACKAGE (PSP)
INDIAN COAST GUARD SALARY PACKAGE (ICGSP)
CORPORATE SALARY PACKAGE (CSP)
START-UP SALARY PACKAGE ACCOUNT (SUSP)
கணக்கு திறக்க தேவையான ஆவணங்கள்
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
PAN கார்டு
முகவரி ஆதாரம்
Employment / Service Certificate
சமீபத்திய சம்பள சீட்டு (Latest Salary Slip)
கூட்டுக் கணக்கிற்கு அடையாளச் சான்று, முகவரிச் சான்று இரண்டும் தேவை
சேமிப்பு கணக்குகளை மாற்றுவதற்கான வசதி
ஏற்கனவே உள்ள சேமிப்பு கணக்குகளை எஸ்பிஐயில் சம்பள கணக்குகளாக மாற்ற முடியும். அதற்கான வேலைவாய்ப்புச் சான்று, சம்பளச் சீட்டு/சேவைச் சான்றிதழை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
சம்பளம் தொடர்ந்து மூன்று மாதங்கள் சம்பளக் கணக்கில் வரவு வைக்கப்படாவிட்டால், அது சாதாரண சேமிப்புக் கணக்கின் கீழ் கருதப்படும். அதற்கேற்ப அனைத்து கட்டணங்களும் விதிக்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |