444 நாட்கள் கொண்ட SBI Special FD திட்டம்.., ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும்?
பாரத ஸ்டேட் வங்கியில் 444 நாட்கள் டெபாசிட் செய்ய கூடிய அம்ரித் விருஷ்டி திட்டதில் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
SBI Amrit Vrishti scheme
எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி திட்டம் (SBI Amrit Vrishti scheme) என்பது நிலையான வைப்புத் திட்டமாகும் (FD). இதில் நீங்கள் 444 நாட்களுக்கு மொத்த தொகையை டெபாசிட் செய்யலாம். முக்கியமாக இந்தத் திட்டம் மார்ச் 31, 2025 வரை மட்டுமே கிடைக்கும்.
இந்த FD திட்டத்தின் கீழ், பொது குடிமக்கள் ஆண்டுக்கு 7.25 சதவீத வட்டி விகிதத்தைப் பெறுவீர்கள். மூத்த குடிமக்கள் தங்கள் வைப்புத்தொகைகளுக்கு ஆண்டுக்கு 7.75 சதவீத வட்டி விகிதத்தைப் பெறுவீர்கள்.
இந்தத் திட்டம் உள்நாட்டு மற்றும் வெளிநாடு வாழ் இந்திய வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யக்கூடிய குறைந்தபட்ச தொகை ரூ.1,000 ஆகும். இந்த FD இல் முதலீடு செய்வதற்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை.
அபராதம்
* ரூ.5 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான அபராதம் 0.50% ஆகும்.
* ரூ.5 லட்சத்துக்கு மேல் ஆனால் ரூ.3 கோடிக்குக் குறைவான டெபாசிட்டுகளுக்கு முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான அபராதம் 1% ஆகும்.
* ஊழியர்கள் மற்றும் எஸ்பிஐ ஓய்வூதியதாரர்களுக்கு அபராதம் இல்லை.
ரூ.5 லட்சம் முதலீடு
இந்த திட்டத்தில் ரூ.5,00,000 முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதம் வட்டி விகிதத்தில் வட்டி மட்டுமே ரூ.49,648 கிடைக்கும். அதன்படி முதிர்வுத் தொகையாக ரூ.5,49,648 கிடைக்கும்.
அதேசமயம் இந்த திட்டத்தில் பொது குடிமக்கள் ரூ.5,00,000 முதலீடு செய்யும் போது, 7.25 சதவீதம் வட்டி விகிதத்தில் வட்டி மட்டுமே ரூ.46,330 கிடைக்கும். அதன்படி முதிர்வுத் தொகையாக ரூ.5,46,330 கிடைக்கும்.
ரூ.7 லட்சம் முதலீடு
இந்த திட்டத்தில் ரூ.7,00,000 முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதம் வட்டி விகிதத்தில் வட்டி மட்டுமே ரூ.69,507 கிடைக்கும். அதன்படி முதிர்வுத் தொகையாக ரூ.7,69,507 கிடைக்கும்.
அதேசமயம் இந்த திட்டத்தில் பொது குடிமக்கள் ரூ.7,00,000 முதலீடு செய்யும் போது, 7.25 சதவீதம் வட்டி விகிதத்தில் வட்டி மட்டுமே ரூ.64,863 கிடைக்கும். அதன்படி முதிர்வுத் தொகையாக ரூ.7,64,863 கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |