வெறும் ரூ.20 மட்டுமே.., வழுக்கை தலையில் முடி வளரும் என ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி
வழுக்கை தலையில் முடி வளரும் என இளைஞர்களை ஏமாற்றி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழுக்கை தலையில் முடி?
பொதுவாகவே மக்கள் அனைவரும் முடி உதிர்தல் பிரச்சனையை பெரிதாக பார்க்கின்றனர். அதுமட்டுமல்லாமல், வழுக்கை தலையாக இருந்தால் எப்படியாவது முடி வளர வேண்டும் என்ற எண்ணத்தில் பல வகையான எண்ணெய்யை தலையில் தேய்க்கின்றனர்.
அந்தவகையில், இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், மீரட் நகரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சல்மான் என்பவர் தன்னுடைய எண்ணெய்யை தலையில் தேய்த்தால் வழுக்கை தலையில் முடி வளரும் என்று கூறி செய்தி தாளில் விளம்பரம் செய்துள்ளார்.
அதுவும், அந்த எண்ணெயின் விலை ரூ.20 மட்டுமே என்று விளம்பரம் செய்துள்ளார். மேலும் அதில், முகாம் நடைபெறும் முகவரியையும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை நம்பி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் முகாம் நடைபெறும் இடத்திற்கு வந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர், அவர்களிடம் இருந்து 20 ரூபாயை பெற்றுக்கொண்ட சல்மான், அவர்களின் தலையில் சிறிய 'பிரஷ்' மூலம் எண்ணெயை தேய்த்து அனுப்பி வைத்தார்.
இதில், வேடிக்கையான விடயம் என்னவென்றால் சல்மானுக்கு வழுக்கை தலை தான். அதனை பற்றி யாரும் சிந்திக்கவில்லை.
இந்நிலையில், சல்மானிடம் எண்ணெய் தேய்த்துக்கொண்ட பலருக்கும் தலையில் அரிப்பு மற்றும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட ஷதாப் என்பவர் இது தொடர்பாக பொலிஸில் புகார் அளித்தார்.
இந்த புகாரின்படி நடத்திய விசாரணையில், வழுக்கை தலையில் முடி வளரும் என்று பொய் கூறி சல்மான் பணம் பறித்தது தெரியவந்தது.
அவர், முன்னதாக டெல்லி, உத்தரகாண்ட், அரியானா ஆகிய மாநிலங்களிலும் முகாம் நடத்தி பணத்தை சுருட்டி வந்துள்ளார். தற்போது, சல்மான் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |