1,372 கோடி மதிப்புள்ள பிரபல நடிகை OpenAIயினால் அதிர்ச்சி
பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன், OpenAI நிறுவனத்தின் ChatGPT-4o மொடல் தனது குரலை பிரதி எடுத்ததாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஸ்கார்லெட் ஜோஹான்சன்
ஹாலிவுட்டின் டாப் 10 நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஸ்கார்லெட் ஜோஹான்சன் (Scarlett Johansson). 39 வயதாகும் இவரின் சொத்து மதிப்பு 165 மில்லியன் டொலர்கள் ஆகும்.
'பிளாக் விடோ' கதாபாத்திரமாகவே ரசிகர்களிடம் புகழ்பெற்ற ஸ்கார்லெட் தற்போது OpenAI நிறுவனத்தின் மீது அதிருப்தி தெரிவித்துள்ளார். அவரது குரலை அந்நிறுவனம் பிரதியெடுத்ததாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த செப்டம்பர் மாதம் OpenAI நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன் எனக்கொரு Offer கொடுத்தார். GPT 4o-வுக்கு எனது குரல் வேண்டும் என அவர் தெரிவித்தார். இதன்மூலம் நுகர்வோர் மற்றும் AI இடையிலான உரையாடல் சுமூகமானதாக இருக்கும் என தெரிவித்தார்.
அதை பரிசீலித்தேன். இருந்தும் தனிப்பட்ட காரணங்களால் அந்த பணியை என்னால் செய்ய முடியவில்லை. இதுநடந்து 9 மாதங்களான நிலையில் எனது குரலை கிட்டத்தட்ட பிரதிபலிக்கும் வகையில் GPT 4oயின் Sky Voice இருப்பதாக குடும்பத்தினர், நண்பர்கள் தெரிவித்தனர்.
அதன் டெமோவைக் கேட்டு நானும் அதிர்ச்சி அடைந்தேன். அந்த எந்திர குரலுக்கும், எனது குரலுக்கும் பாரிய வித்தியாசங்களை என்னுடன் பழகியவர்களால் கூட அடையாளம் காண முடியாத வகையில் அது உள்ளது. இதுதொடர்பாக சட்ட ரீதியான விளக்கம் கேட்டதுடன், சாம் ஆல்ட்மேனிடம் sky voiceஐ உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளேன்'' என்றார்.
GPT 4o
இந்த நிலையில் தான் Her எனும் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட எந்திரத்துடன் GPT 4o மொடலை ஒப்பிட்டு சாம் ஆல்ட்மேன் பேசியது சர்ச்சையானது.
ஏனெனில், Her படத்தில் வரும் எந்திரத்திற்கு குரல் கொடுத்தது ஸ்கார்லெட் தான். எனினும் GPT 4o மொடலில் ப்ரீஸ், கோவ், எம்பர், ஜூனியர் மற்றும் ஸ்கை என 5 குரல்களை OpenAI சேர்த்திருந்தது. இந்த குரல்கள் அனைத்தும் Voice Artist உடன் இணைந்து OpenAI நிறுவனம் உருவாக்கியதாக விளக்கம் அளித்துள்ளது.
மேலும், ''ஒரு பிரபலத்தின் குரலை AI பிரதிபலிக்க கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். அந்த வகையில் Sky voiceயின் குரல் ஸ்கார்லெட் ஜோஹான்சனுடையது அல்ல. அதற்கு Voice Artist ஒருவர் தான் குரல் கொடுத்திருந்தார். அதனை பிரைவசி காரணமாக பகிர்ந்துகொள்ள முடியாது'' எனவும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |