ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.70 லட்சம் பெறலாம்.., இந்த திட்டம் பற்றி தெரியுமா?
பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தை பற்றி பார்க்கலாம்.
சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana - SSY)
பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மத்திய அரசு சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana - SSY) அல்லது செல்வமகள் சேமிப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த திட்டத்தில் ஒக்டோபர் 1 -ம் திகதி முதல் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 10 வயதுக்கும் உட்பட்ட பெண் பிள்ளைகளுக்குப் பதிலாக பாதுகாவலர்கள் SSY அக்கவுண்ட்டைத் திறக்கலாம்.
முக்கியமாக இந்த திட்டத்தின் கீழ் ஒரு வீட்டில் இரு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கணக்கை திறக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் குறைந்தபட்சம் ரூ.250 -ம், அதிகபட்சமாக ரூ.1.5 லட்சமும் முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் 15 ஆண்டுகள் ஆகும். ஒருவேளை பெண் பிள்ளை 18 வயதில் திருமணம் செய்து கொண்டாலோ அல்லது 21 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதை அடைந்தாலோபாலிசி மெச்சூரிட்டி ஆனதாக கருதப்படும்.
இந்த திட்டத்திற்கு தற்போது 8.2 சதவீத வட்டியை அரசு செலுத்தி வருகிறது. இத்திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் ஒரு பெண் குழந்தைக்கு, ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு வரி வசூலிக்கப்படுவதில்லை.
அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் ரூ.1.5 லட்சத்தை 15 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் மொத்த தொகை ரூ.22,50,000 ஆக இருக்கும். அதேபோல 8.2 சதவீத வட்டியில் ரூ.46,77,578 கிடைக்கும்.
அந்தவகையில் மொத்தமாக ஒரு பெண் 21 வயதை அடைந்தால் அவருக்கு மொத்தம் ரூ. 69,27,578 கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |