அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.., 7 மாணவர்கள் உயிரிழந்த பரிதாபம்
ராஜஸ்தான் மாநிலம் ஜாலவர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 7 மாணவர்கள் உயிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 மாணவர்கள் பலி
ராஜஸ்தான் மாநிலம் ஜாலவர் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி தொடக்கப்பள்ளி இன்று வழக்கம்போல் காலை திறக்கப்பட்டது.
பள்ளி திறந்த சிறிது நேரத்திலேயே பள்ளியின் மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தபோது அங்கு 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்திருந்தாக சொல்லப்படுகிறது.
இந்த இடிபாடுகளில் சிக்கி கூச்சலிட்ட மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஊர் மக்கள் அங்கு வந்து மாணவர்களை மீட்டனர்.
बहुत दुखद!
— Dr. B L Bairwa MS, FACS (@Lap_surgeon) July 25, 2025
झालावाड़, राजस्थान में सरकारी स्कूल की जर्जर बिल्डिंग गिर गई।
अब तक 5 बच्चों की मौत हुई, 30 से ज्यादा गंभीर घायल हैं।
जिम्मेदार लोग TV पर भी ये news नहीं देखते??pic.twitter.com/MHRB0XhYVA
படுகாயம் அடைந்த மாணவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் பொலிஸார், தீயணைப்பு வீரர்கள், மீட்பு படையினர் ஆகியோரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த விபத்தில் சிக்கி 7 மாணவர்கள் உயிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |