40 மாணவர்களுடன் 50 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து: விசாரணையில் தெரியவந்த காரணம்
அமெரிக்காவில் மாணவர்களுடன் சென்ற பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து விபத்து
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆரஞ்சு கவுண்டி பகுதியின் நெடுஞ்சாலையில் உயர்நிலைப் பள்ளியின் இசைக்குழு மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.
கிட்டத்தட்ட 40 மாணவர்களுடன் சென்ற பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.
NBC New York
இதில் கினா பலேட்டியர்(43) மற்றும் பீட்ரைஸ் பெர்ராரி(77) என்ற இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் மாணவர்கள் அனைவரும் பலத்த காயமடைந்ததால் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் 5 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில் பேருந்து விபத்து குறித்து நியூயார்க் நகர காவல் துறையின் லெப்டினன்ட் கர்னல் ரிச்சர்ட் எல் மஸ்ஸோன் விசாரணை நடத்தி வருகிறார்.
NBC New York/AP
முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள தகவல்படி, பேருந்தின் டயர் வெடித்ததே காரணம் என தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |