சிறார்கள் பற்றவைத்த சிகரெட்டு... மொத்தமாக வெடித்துச் சிதறிய ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டர்
ரஷ்யாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராணுவ ஹெலிகொப்டர் ஒன்றை பாடசாலை சிறார்கள் இருவர் மொத்தமாக அழித்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாடசாலை சிறுவர்கள்
ரஷ்யாவின் Noyabrsk விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ 122 கோடி மதிப்பிலான ஹெலிகொப்டருக்குள் பாடசாலை சிறுவர்கள் இருவர் நுழைந்து விளையாடியுள்ளனர்.
அத்துடன் அவர்கள் எரியக்கூடிய திரவத்தை அதில் ஊற்றியுள்ளனர். அதன் பிறகு, அவர்கள் சிகரெட்டைப் பயன்படுத்தியுள்ளனர். இதில் அந்த ஹெலிகொப்டரானது கொழுந்துவிட்டெரிந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு நடந்த இச்சம்பவம் தொடர்பில் ரஷ்ய ராணுவத்திற்கு நெருக்கமான சமூக ஊடக பக்கம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஹெலிகொப்டரில் எரியக்கூடிய திரவத்தை ஊற்றியதன் பின்னர், சிகரெட் புகைக்க முடிவு செய்துள்ள சிறார்கள் இருவரும், பின்னர் அந்த சிகரெட்டை ஹெலிகொப்டருக்குள் வீசியுள்ளனர்.
இதன் பின்னரே ஹெலிகொப்டர் வெடித்துள்ளது. இதனையடுத்து சிறார்கள் இருவரையும் கைது செய்துள்ள அதிகாரிகள், அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
5 மில்லியன் ரூபிள்
இந்த விபத்தில் சிறார்கள் இருவரும் காயமடைந்துள்ளதாகவே கூறப்படுகிறது. மேலும், ஹெலிகொப்டர் மொத்தமாக சேதமடைந்துள்ளது. ஆனால் ஹெலிகொப்டரை சேதப்படுத்த எவரேனும் அந்த சிறுவர்கள் இருவரையும் தூண்டினார்களா என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தொடர்புடைய சிறார்கள் இருவருக்கும் 5 மில்லியன் ரூபிள் தொகை சன்மானம் அளிக்கப்பட்டுள்ளதாக ஒருவர் குறிப்பிட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, உக்ரைன் மீதான ஊடுருவலுக்கு பிறகு ரஷ்யா 144 ஹெலிகொப்டர்களை இழந்துள்ளது என்றும், இதில் 112 மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது என்றும், 30 ஹெலிகொப்டர்கள் சேதமடைந்துள்ளது என்றும், இரண்டு எண்ணிக்கை உக்ரைன் படைகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |