பள்ளிக்கூட பேருந்தில் தனியாக இருந்த மாணவிக்கு ஓட்டுனரால் நேர்ந்த கதி! துணிச்சலுடன் வெளியில் கூறியதால் கைது செய்த பொலிஸ்
அமெரிக்காவில் பள்ளிக்கூட பேருந்தில் மாணவி மீது பாலியல் தாக்குதல் நடத்திய ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹில்ஸ்பாரோ கவுண்டியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு பள்ளியில் இயங்கும் பேருந்துக்கு ஓட்டுனராக இருப்பவர் ரொனால் ஜான்சன் (45).
இவர் பள்ளி பேருந்தில் தனியாக இருந்த மாணவியிடம் அத்துமீறி பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் ஜான்சனை கைது செய்துள்ளனர். இது குறித்து சட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், பெற்றோர்கள் பள்ளி அமைப்பின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் போன்ற மோசமான நபர்களால் அந்த நம்பிக்கை கேள்விக்குறி ஆகிறது. மிகவும் துணிச்சலாக பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறியிருக்கிறார்.
இதன்மூலம் ஓட்டுனர் ஜான்சனுக்கு தக்க பாடம் புகட்டப்படும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.
