மாஸ்க் அணியாமல்.. பள்ளி ஆசிரியர் செய்த கொடூர செயல்! பதறிப்போன பெற்றோர்கள்
அமெரிக்காக்காவில் பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளியில் பயிலும் பாதி குழந்தைகளுக்கு கொரோனாவை பரப்பிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் கடந்த ஆண்டில் தொடங்கியதில் இருந்து இன்றுவரை பல்வேறு நாடுகளில் கட்டுக்குள் அடங்காமல் மக்களை கொடூரமாக தாக்கி வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் பள்ளி ஆசிரியர் செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் பயிலும் பாதி மாணவர்களுக்கு கடந்த மே மாதம் கொரோனா வைரஸ் பரவியது. அவர்களுக்கு பரவியதையடுத்து பெற்றோர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
குழந்தைகளுக்கு எப்படி கொரோனா வைரஸ் பரவியது குறித்து சுகாதாரத்துறை விசாரணை மேற்கொண்டது. இதன் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது அந்த பள்ளியின் ஆசிரியர்களுள் ஒருவர் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லையாம். அதுமட்டும் இல்லாமல் அவர் வகுப்பறையில் பாடம் எடுக்கும் பொழுது மாஸ்க் அணியமாட்டாராம்.
இதை தொடர்ந்து அவருக்கு 3 நாட்களுக்கு பின் கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவரின் வகுப்பில் பயின்ற 24 மாணவர்களில் 12 பேருக்கும் கொரோனா பரவி இருக்க வேண்டும் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.