நண்பனை கொல்வது எப்படி? சேட்ஜிபிடியிடம் கேட்ட பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கதி
நண்பனை கொல்வது எப்படி என சேட்ஜிபிடியில் தேடிய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேட்ஜிபிடி
சேட்ஜிபிடி போன்ற AI சாட்பாட்களை, மக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வருகிறார்கள்.
பயண ஆலோசனை தொடங்கி, நிதி திட்டமிடல், உணவு கட்டுப்பாடு போன்றவற்றுக்கும் மக்கள் சேட்ஜிபிடியை நாடுகின்றனர்.
ஆனால், பள்ளி மாணவன் ஒருவன் தனது நண்பனை கொல்வது எப்படி என விளையாட்டாக தேடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் டெலாண்டில் உள்ள சவுத்வெஸ்டர்ன் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு சேட்ஜிபிடியுடன் கூடிய சாதனம் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 13 வயது மாணவன் ஒருவன், தனது சக மாணவனை வகுப்பறையில் வைத்து கொல்வது எப்படி என தேடியுள்ளான்.
எச்சரித்த Gaggle அமைப்பு
அந்த சாதனத்தில் இணைக்கப்பட்ட AI அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பான Gaggle அமைப்பு, இது குறித்து பள்ளி வளாக காவல் அதிகாரிக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளது.
இது குறித்து காவல்துறையினர் அந்த மாணவனை விசாரித்த போது, தான் விளையாட்டிற்காகவே அவ்வாறு தேடியதாக தெரிவித்துள்ளான்.
இருந்தாலும், அமெரிக்காவில் பள்ளிகளில் மாணவர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்களை கருத்தில் கொண்டு, அந்த மாணவன் கைது செய்யப்பட்டு கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
Gaggle அமைப்பு பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள சாதனங்களில், மாணவர்கள் தேடுவதை கண்கானித்து ஆபத்தான தேடல்கள் குறித்து காவல்துறைக்கு எச்சரிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |