வெளிநாடு சென்ற தாய்.., தந்தை அடித்ததால் பாடசாலை மாணவி எடுத்த முடிவு
இலங்கையில், தந்தை அடித்ததால் மன உளைச்சலுக்கு உள்ளான பாடசாலை மாணவி விபரீத முடிவு எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தந்தை தாக்குதல்
இலங்கையின் மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள வட்டகொடை மேல் பிரிவில் 15 வயதுடைய ஜீவராஜன் ரதிபிரியா என்ற பாடசாலை மாணவி வசித்து வந்தார்.
இவருடைய தாய், தொழில் நிமித்தம் காரணமாக வெளிநாடு சென்றுள்ளார். இதனால், ஜீவராஜன் ரதிபிரியா தந்தையின் பராமரிப்பின் கீழ் உள்ளார்.
இந்நிலையில், தந்தை அடித்து தாக்கியதால் மாணவி மன உளைச்சலுக்கு உள்ளானார் எனக் கூறப்படுகிறது.
மாணவி தற்கொலை
இதனால், பாடசாலை மாணவி ஜீவராஜன் ரதிபிரியா சேலையில் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த விடயம் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உயிரிழந்த சிறுமியின் சடலம் நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னரே பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.
இதன் பின்னரே, சிறுமியின் உடல் தந்தையிடம் ஒப்படைக்கப்படும் என நுவரெலியா வைத்திய சாலையின் சிரேஸ்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |