பள்ளிகளை மீண்டும் திறந்தே ஆகவேண்டும்: வலியுறுத்தும் அமெரிக்க சுகாதார அமைப்பு
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பள்ளிகளை மீண்டும் திறக்க வலியுறுத்தியள்ளது, மேலும் அதற்கான புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் உயர்மட்ட சுகாதார அமைப்பான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான விரிவான திட்டத்தை வெள்ளிக்கிழமை வழங்கியுள்ளது.
அதே வேளையில், பள்ளிகளை பாதுகாப்பாகவும் விரைவில் திறக்கவும் வலியுறுத்தி புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது.
கிட்டத்தட்ட ஒரு வருடமாக பள்ளிகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே தங்கியிருக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் பல உடல் மற்றும் மனநல ஆபத்துகள் குறித்து குழந்தை சுகாதார வல்லுநர்கள் பலரும் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக CDC தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பொதுவாக K-12 என குறிப்பிடப்படும், மழலை வகுப்புகள் முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழிகாட்டுதல்கள் அடிப்படையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வகுப்புகள் தொடங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளில் வாரம் ஒரு முறை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கோவிட்-19 அறிகுறிக்களுக்கான சோதனையை மேற்கொள்ளப்படம் என்று கூறிய CDC, விரைவில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.