எகிப்து பிரமிடுகளுக்கு கீழே பிரம்மாண்ட நகரம் கண்டுபிடிப்பு
எகிப்து பிரமிடுகள்
எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுகள் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இதன் உள்ளே பண்டைய கால எகிப்திய மன்னர்களின் கல்லறைகள் உள்ளது. மேலும், பண்டைய கால ஆட்சியாளர்களின் உடல்கள் அங்கு தற்போது வரை பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நவீன தொழில்நுட்பமும் இல்லாத 2500 ஆண்டுகளுக்கு முன்னர், பிரமிடுகள் கட்டப்பட்டது எப்படி? உடல்கள் பதப்படுத்தப்பட்டது எப்படி என்பது தற்போது வரை மர்மமாகவே உள்ளது.
இது தொடர்பான ஆய்வுகள் நீண்ட காலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரமிடுகளுக்கு கீழே மிகப்பெரிய நகரம் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நிலத்தடி நகரம்
ரேடார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில், பிரமிடுகளுக்கு கீழே 4000 அடி பரப்பளவில், 38,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதில் 2100 அடிக்கு மேல் ஆழமுள்ள 8 கிணறு போன்ற அமைப்புகள் உள்ளன. அவை, இரண்டு பெரிய கனசதுர வடிவ அறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையும் சுமார் 80 மீட்டர் அளவில் உள்ளது.
உயர் அதிர்வெண் மின்காந்த அலைகளை நிலத்தடிக்குள் அனுப்புவதன் மூலம் கிணறு போன்ற அமைப்பு மற்றும் அறைகள் அடையாளம் காணப்பட்டன.
மேலும், சமிக்ஞைகள் திரும்பி வந்ததன் அடிப்படையில், ஆராய்ச்சியாளர்கள் பிரமிடின் அடியில் உள்ள கட்டமைப்புகளை வரைபடமாக்க அனுமதித்தது.
மேலும், 4000 அடிக்கு கீழே அறியப்படாத கட்டமைப்புகள் இருக்க வாய்ப்புள்ளது" என தெரிவித்துள்ளனர்.
பிரமிடுகள் காட்டப்படும் முன் அந்த இடம் எகிப்தின் முக்கிய நகராக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த ஆய்வு முடிவுகள் உறுதி செய்யப்பட்டால் பிரமிடுகள் மற்றும் அதன் வரலாறு குறித்த புரிதலை மாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |