நவம்பரில் பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? பாபா வங்காவும் விஞ்ஞானிகளும் ஒரே கணிப்பு

Baba Vanga
By Karthikraja Jul 31, 2025 03:10 AM GMT
Report

பால்கனின் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வாங்கா(baba vanga), 2025 ஆம் ஆண்டில் மனிதகுலம் வேற்று கிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளும் என்று கணிப்பு தெரிவித்திருந்தார். 

baba vanga prediction about alien to earth

அவரது பல்வேறு கணிப்புகள் அப்படியே நிகழ்ந்துள்ள நிலையில், வேற்றுகிரக வாசிகள் குறித்த கணிப்பும் சாத்தியப்படுவதற்கான தகவல் ஒன்றை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

விண்வெளியில் மர்மப்பொருள்

கடந்த ஜூலை 1, 2025 அன்று சிலியில் உள்ள ஒரு தொலைநோக்கி மூலம் 3I/ATLAS என்று பெயரிடப்பட்ட பொருள் ஒன்று முதன்முதலில் கண்டறியப்பட்டது. 

முதலில் இது வால்மீண் என கருதிய விஞ்ஞானிகள், இது சூரிய மண்டலத்திற்கு வெளியே உருவானது என கூறியுள்ளனர். 

ஜப்பானில் ஒலித்த சைரன்... பாபா வங்காவின் கணிப்பு பலித்தது?

ஜப்பானில் ஒலித்த சைரன்... பாபா வங்காவின் கணிப்பு பலித்தது?

இந்த பொருளானது, 10 முதல் 20 கிலோமீட்டர் அகலத்தில் மன்ஹாட்டன் நகரை விட பெரிய பரப்பளவைக் கொண்டுள்ளது என கூறப்படுகிறது. இது மணிக்கு 130,000 மைல் (வினாடிக்கு 60 கிமீ) வேகத்தில் பயணிக்கும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், வேற்றுகிரகவாசிகள் குறித்த கருத்துக்கு பெயர் பெற்ற ஹார்வர்ட் வானியற்பியல் விஞ்ஞானி அவி லோப்(Avi Loeb), இதன் தனித்துவமான பாதை மற்றும் விதிவிலக்கான அதிவேகம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி இது வேற்றுகிரக வாசிகளின் உளவு ஆய்வாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார். 

நவம்பரில் பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? பாபா வங்காவும் விஞ்ஞானிகளும் ஒரே கணிப்பு | Scientist Says Alien May Come Earth In November

லண்டனை சேர்ந்த ஆடம் ஹிப்பர்ட் மற்றும் ஆடம் க்ரோல் ஆகிய ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து இதை தெரிவித்துள்ளார்.

இந்த பொருளானது, அடுத்த சில மாதங்களில், வியாழன், செவ்வாய் மற்றும் வெள்ளியைக் கடந்து சென்று, நவம்பர் மாத இறுதியில் சூரியனுக்குப் பின்னால் மறைந்து, பூமியின் பார்வையில் இருந்து மறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் சந்தேகம்?

இந்தப் பொருளின் சுற்றுப்பாதை பாதை பூமியின் சுற்றுப்பாதையுடன் வெறும் 5 டிகிரிக்குள் சீரமைக்கப்பட்டுள்ளது, இது சீரற்ற முறையில் நிகழ 0.2 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

வியாழன், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய 3 முக்கிய கிரகங்களை நெருங்கிய தூரத்தில் கடந்து செல்ல உள்ளது. இந்த பாதை தற்செயலாக 0.005 சதவீதத்திற்கும் குறைவான நிகழ்தகவு கொண்டது. 

இது, வேற்றுகிரகவாசிகள் இந்த கிரகங்களில் கண்காணிப்பு சாதனங்களை ரகசியமாக நிலைநிறுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பு என தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாத இறுதியில் சூரியனுக்கு மிக நெருக்கமாக செல்லும் போது, பூமியை அடிப்படையாகக் கொண்ட தொலைநோக்கியில் புலப்படாமல் மறைய உள்ளது. பூமிக்கு உளவு சாதனங்களை அனுப்பப்படும்போது இது வேண்டுமென்றே இவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம் என்ற யூகத்தை தெரிவித்துள்ளார். 

உலகின் மிக விலையுயர்ந்த உலோகம் எது தெரியுமா? தங்கம், பிளாட்டினம் அல்ல

உலகின் மிக விலையுயர்ந்த உலோகம் எது தெரியுமா? தங்கம், பிளாட்டினம் அல்ல

இதை நாம் ஆய்வு செய்ய விரும்பினாலும், அது நம்மிடம் உள்ள ராக்கெட்களை விட 3 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது என்பதால், அதை நம்மால் பிடிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.     

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US