அண்டார்டிகாவில் ரகசிய உலகம்? விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு கூறும் உண்மை
விஞ்ஞானிகள் தற்போது அண்டார்டிகாவின் பனிக்கு அடியில் பள்ளத்தாக்குகளை கண்டறிந்துள்ளனர்.
மறைந்த ரகசிய உலகம்
உயிரற்ற நிலப்பரப்பான அண்டார்டிகாவில் பனிக்கு அடியில் ஒரு மறைந்த ரகசிய உலகம் உள்ளது.
அதாவது, நீர்மூழ்கிப் பள்ளத்தாக்குகளைத்தான் விஞ்ஞானிகள் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்.
இதுகுறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றை Marine Geology என்ற அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளது. இதில் அண்டார்டிகாவின் கடல் தளத்தில் 332 நீர்மூழ்கிப் பள்ளத்தாக்குகள் புதைந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் IBCSO v2 மூலம் உருவாக்கப்பட்ட மேம்பட்ட கடலடி வரைபடத்தைப் பயன்படுத்தி இவற்றை முதல் முறையாக கண்டறிந்துள்ளனர்.
இவை சுமார் 4,000 மீற்றர் ஆழம் கொண்டதாக உள்ளதால், கடலுக்கடியில் உள்ள நெடுஞ்சாலைகள் போல செயல்பட்டு ஊட்டச்சத்துகள், படிவுகள் மற்றும் தண்ணீரை கடற்கரையில் இருந்து ஆழ்கடலுக்கு நகர்த்துகின்றன.
கடல்வாழ் உயிரினங்கள் இதன்மூலம் வளம்பெறுகின்றன. பூமியின் ஒட்டுமொத்த காலநிலையை சீராக்க இவை உதவுகின்றன.
இந்தப் பள்ளத்தாக்குகள் சூடான நீரை பனிப்பாறைகளின் அடியில் செலுத்தி, அவற்றை உருகுவதற்கு காரணமாக உள்ளன.
ஆயிரக்கணக்கான பள்ளத்தாக்குகள்
மேலும், குளிர்ந்த நீரை ஆழ்கடலுக்குள் தள்ளி, Antarctic Bottom Water போன்ற உலகளாவிய கடல் நீரோட்டங்களுக்கு உதவுகின்றன.
நூற்றுக்கணக்கான பள்ளத்தாக்குகள் அண்டார்டிகாவில் மறைந்துள்ளன. அதேபோல் ஆயிரக்கணக்கான பள்ளத்தாக்குகள் உலகெங்கிலும் உள்ள கடல்களில் மறைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த பள்ளத்தாக்குகள் கிழக்கு அண்டார்டிகாவில் 'U' வடிவில் அகலமாகவும், மேற்கு அண்டார்டிகாவில் 'V' வடிவில் செங்குத்தாகவும், குறுகலாகவும் காணப்படுகின்றன. இவை தீவிரமான புவியியல் நிகழ்வுகளால் சமீபத்திய காலத்தில் உருவானதை காட்டுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தற்போது கண்டுபிடிப்பு ஒரு ஆரம்பம் என்பதுடன், பூமியின் கடலடியில் வெறும் 27 சதவீதம் மட்டுமே High resolution வரைபடமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |