375 ஆண்டுகளாக மறைந்திருந்த உலகின் 8வது கண்டம்! விஞ்ஞானிகள் ஆச்சரியத் தகவல்
உலகின் 8வது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
புதிய கண்டம்
நியூசிலாந்து நாட்டிற்கு அருகே 375 ஆண்டுகளாக மறைந்திருந்த புதிய கண்டத்தை, புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை உலகின் 8வது கண்டம் என்று கூறியுள்ள விஞ்ஞானிகள், கடல் தளத்தில் இருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி இதை கண்டுள்ளனர்.
ஜீலந்தியா
தற்போது இந்த புதிய கண்டத்திற்கு ஜீலந்தியா (Zealandia) என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது மடகாஸ்கர் தீவை காட்டிலும் 6 மடங்கு பெரியது என தெரிய வந்துள்ளது.
இதன் புதிய கண்டத்தின் 94 சதவீத பகுதி நீருக்கு அடியில் மூழ்கியுள்ளதாகவும், 49 லட்சம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவு கொண்டதாக ஜீலந்தியா அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நியூசிலாந்தைப் போல மேலும் சில உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |