பிளாஸ்டிக்கையே சிதைக்கும் பூஞ்சை: குப்பை மேட்டில் ஒரு அரிய கண்டுபிடிப்பு

Pakistan China Plastic
By Balamanuvelan Aug 10, 2026 10:08 AM GMT
Report

மண்ணில் மட்காமல் நீண்ட காலம் கிடந்து மண் மாசுவை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கையே சிதைக்கக்கூடிய பூஞ்சை ஒன்றை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

பிளாஸ்டிக் பொருட்கள், இயற்கையாக மண்ணில் மட்காமல் நீண்ட காலம் கிடக்கும் விடயம், மனித குலத்துக்கு பெரும் தொல்லையாக காணப்படும் நிலையில், பிளாஸ்டிக்கையே சிதைக்கக்கூடிய பூஞ்சை ஒன்றை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

பிளாஸ்டிக்கையே சிதைக்கும் பூஞ்சை

பாகிஸ்தான் மற்றும் சீன அறிவியலாளர்கள், பிளாஸ்டிக்கையே மக்கச் செய்யும் பூஞ்சை ஏதாவது உள்ளதா என்பதைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுவந்துள்ளார்கள்.

அதற்காக ஆய்வு மேற்கொள்வதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த இடம், பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாதில் உள்ள குப்பை மேடு ஒன்று! 

பிளாஸ்டிக்கையே சிதைக்கும் பூஞ்சை: குப்பை மேட்டில் ஒரு அரிய கண்டுபிடிப்பு | Scientists Found Waste Dump Fungus Degrade Plastic

அந்தக் குப்பை மேட்டில் கிடந்த பிளாஸ்டிக் போத்தல்களை சிதைக்கக்கூடிய ஏதாவது பூஞ்சை உள்ளதா என்னும் ஆய்வில் அவர்கள் ஈடுபட, அப்படி ஒரு பூஞ்சை உண்மையாகவே உள்ளதை அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஆம், ஆஸ்பெர்ஜில்லஸ் டியூபிங்கென்சிஸ் (Aspergillus tubingensis) என்னும் பூஞ்சையால், கடினமான பிளாஸ்டிக்கான Polyurethane என்னும் பிளாஸ்டிக்கை இரண்டு மாதங்களில் சிதைக்கமுடியும் என்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். 

ரூ.5 லட்சம் பணத்தை அரித்த கரையான் - விவசாயிக்கு நேர்ந்த துயரம்

ரூ.5 லட்சம் பணத்தை அரித்த கரையான் - விவசாயிக்கு நேர்ந்த துயரம்

அதாவது, உண்மையில் இந்த பூஞ்சை பிளாஸ்டிக் மீது வளரும்போது அந்த பிளாஸ்டிக்கை இரண்டு மாதங்களில் காணாமல்போகச் செய்துவிடும் என்று பொருள் இல்லை.

விடயம் என்னவென்றால், இந்த Polyurethane என்னும் பிளாஸ்டிக், தோல் பொருட்களுக்கு மாற்றாக, குறைந்த விலையில் தோல் போலவே காணப்படும் செயற்கை தோல் (synthetic leather) காலணிகள், தண்ணீர் புகாத மழை கோட்கள், மெத்தைகள் போன்றவற்றின்மீது பூசப்படுகிறது.

அப்படியிருக்கும்பட்சத்தில், இந்த வகை ஆஸ்பர்ஜில்லஸ் பூஞ்சை பிளாஸ்டிக்கை இரண்டு மாதங்களில் சிதைக்குமானால், இரண்டு மாதங்களில் பூஞ்சை படர்ந்த காலணிகளும், மழை கோட்களும் மாயமாகிவிடும்.

ஆக, விடயம் அப்படியல்ல, அந்த பூஞ்சை உருவாக்கும் ஒருவித என்சைம், இந்த பிளாஸ்டிக்கை சிதைக்க காரணமாக அமைந்துள்ளது என்பதுதான் பொருள்.

மேற்கொண்டு மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மூலம், அந்த என்சைமை ஆய்வாளர்கள் தனியாக பிரித்தெடுக்கும் நிலையில், அதை பெருமளவில் தயாரித்து, மட்காத பிளாஸ்டிக்கை மட்கச் செய்வதற்காக பயன்படுத்தமுடியும் என்பதுதான் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ள ஒரு நல்ல செய்தியாகும்! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US