பூச்சிகளை உண்ணும் தாவரம்... 150 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியலாளரின் கூற்று நிரூபணம்

China
By Balamanuvelan Aug 06, 2026 01:30 PM GMT
Report

பிரபல அறிவியலாளரான சார்லஸ் டார்வினின் பூச்சி உண்ணும் தாவரம் குறித்த கூற்று ஒன்று தற்போது நிரூபணமாகியுள்ளது.

பிரபல அறிவியலாளரான சார்லஸ் டார்வின், 150 ஆண்டுகளுக்கு முன் ஒரு குறிப்பிட்ட தாவரம் குறித்து, அது பூச்சி உண்ணும் தாவரமாக இருக்கலாம் என்று கூறியிருந்தார். ஆனால், அவரால் அதை நிரூபிக்கமுடியவில்லை!

அறிவியலாளரின் கூற்று நிரூபணம்

1875ஆம் ஆண்டு, Saxifraga rotundifolia மற்றும் S. umbrosa என்னும் தாவரங்கள் பூச்சி உண்ணும் தாவரங்கள் என்று கூறியிருந்தார் டார்வின்.

பூச்சிகளை உண்ணும் தாவரம்... 150 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியலாளரின் கூற்று நிரூபணம் | Scientists Identify An Insect Eating Plant

இந்த Saxifraga வகை தாவரங்களில் மெல்லிய முடி போன்ற அமைப்புகள் காணப்படுவதுடன், அந்த தாவரங்கள் பசை போன்ற ஒரு திரவத்தையும் சுரக்கின்றன.

ஆகவே, அந்த தாவரம் பூச்சி உண்ணும் தாவரமாக இருக்கலாம் என்னும் கருத்தை முன்வைத்திருந்தார் டார்வின்.

விடயம் என்னவென்றால், ஒரு தாவரம் பூச்சி உண்ணும் தாவரம் என்னும் வரையறைக்குள் வரவேண்டுமானால், அந்தத் தாவரம் பூச்சிகளை கவர்ந்திழுத்து, பிடித்து வைத்து, உட்கொள்ளவேண்டும். 

குழந்தையின் வயிற்றின் வெளியே வளர்ந்த குடல் - கருவிலே அறுவை சிகிச்சை

குழந்தையின் வயிற்றின் வெளியே வளர்ந்த குடல் - கருவிலே அறுவை சிகிச்சை

ஆக, Saxifraga தாவரம் பூச்சி உண்ணும் தாவரமாக இருக்கலாம் என்று டார்வின் கூறினாலும், அவரால் அதை நிரூபிக்கமுடியவில்லை.

பூச்சிகளை உண்ணும் தாவரம்... 150 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியலாளரின் கூற்று நிரூபணம் | Scientists Identify An Insect Eating Plant

இந்நிலையில், 150 ஆண்டுகளுக்குப் பின், டார்வினின் கூற்று உண்மைதான் என்பதை ஆய்வாளர்கள் சிலர் நிரூபித்துள்ளார்கள்.

சீன தலைநகரான பீஜிங்கிலுள்ள Chinese Academy of Sciences என்னும் அமைப்பிலுள்ள Kunming Institute of Botany என்னும் நிறுவன ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்கள்.

அதாவது, ஒரு தாவரம் பூச்சி உண்ணும் தாவரம் என்னும் வரையறைக்குள் வரவேண்டுமானால், அந்தத் தாவரம் பூச்சிகளை கவர்ந்திழுத்து, பிடித்து வைத்து உட்கொள்ளவேண்டும்.

இந்த Saxifraga தாவரம், பூச்சிகளை கவர்ந்திழுப்பதை தற்போது ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளார்கள்.

அதாவது, Saxifraga தாவரம் ஒருவித வாசனையை வெளியிடுவதன் மூலம் பூச்சிகளைக் கவர்வது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, சிக்கிய பூச்சிகளை, phosphatase என்னும் என்சைம் மூலம் அந்த தாவரம் ஜீரணிப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த Saxifraga தாவரம் உயரமான மலைகளில், கடல் மட்டத்திலிருந்து 8,000 முதல் 18,000 அடி உயரத்தில் வளர்கிறது. 

பூச்சிகளை உண்ணும் தாவரம்... 150 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியலாளரின் கூற்று நிரூபணம் | Scientists Identify An Insect Eating Plant

என்னதான் அந்த தாவரத்தால் ஒளிச்சேர்க்கை மூலம் தனக்கான உணவைத் தயாரித்துக்கொள்ளமுடியும் என்றாலும், அவ்வளவு உயரத்தில் அதற்கு நைட்ரேட்கள் கிடைக்காது.

அப்படியானால், நைட்ரேட்டுக்கு என்ன செய்வது? மண்ணில் நைட்ரேட் கிடைக்கவில்லை என்றால், நைட்ரேட்டுக்கு ஒரே வழி பூச்சிகள்தான். ஆக, நைட்ரேட் நிறைந்துள்ள பூச்சிகளை கவர்ந்து உட்கொண்டு, தனது நைட்ரேட் தேவையை பூர்த்தி செய்துகொள்கிறது Saxifraga தாவரம்.

அதையும், Isotope labeling என்னும் செயல்முறை மூலம் நிரூபித்துள்ளார்கள் அறிவியலாளர்கள்.

நைட்ரஜன் - 15 என்னும் நைட்ரஜன் ஐசோடோப்களை பூச்சிகளின் உடலுக்குள் செலுத்தி, பின் அந்த பூச்சிகளை தாவரங்களுக்கு உணவாக்கி, அதன்பின், அந்த தாவரங்களில் அந்த நைட்ரஜன் - 15 என்னும் நைட்ரஜன் ஐசோடோப்கள் உள்ளதை ஆய்வு மூலம் உறுதி செய்து, Saxifraga தாவரம் பூச்சி உண்ணும் தாவரம்தான் என்பதை நிரூபித்துள்ளார்கள் ஆய்வாளர்கள்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US