48,500 ஆண்டுகள் புதைந்து போயிருந்த zombie வைரஸ் கண்டுபிடிப்பு! விஞ்ஞானிகள் கூறும் அதிச்சி தகவல்!
கடந்த ஆண்டு ரஷ்யாவில் 48,500 ஆண்டுகளாக செயலிழந்து பனிக்கட்டிகளில் புதைந்திருந்த zombie வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
பல காலங்களாக உறைந்திருந்ததனால் பெரிய பாதிப்பில்லாமல் செயலற்றிருந்த நிலையில் இது மீண்டும் வன விலங்குகளுக்கு ஆபத்தை உண்டாக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தொலைதூர கடந்த காலத்தில் உண்டான நோயினால் வெளிவந்த ஒரு தொற்றுநோய் வைரஸ் என்பது கேட்பதற்கு ஒரு அறிவியல் திரைப்பட பாணியில் இருந்தாலும் இது ஒரு உண்மை.
இதனால் ஆபத்து ஏற்படும் சாத்தியங்கள் குறைவானதாக இருந்தாலும், இதனை குறைவாக மதிப்பிட கூடாது எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
முடிந்தளவு இந்த பெர்மபிரோஸ்ட்டை உறைய வைப்பது முக்கியமாக கருத்தில் கொள்ளத்தக்கது என கலிபோர்னியாவில் உள்ள நாசா ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் காலநிலை விஞ்ஞானி கிம்பர்லி மைனர் கூறினார்.
பெர்மாஃப்ரோஸ்ட் வடக்கு அரைக்கோளத்தின் ஐந்தில் ஒரு பகுதியை உள்ளடக்கியது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அலாஸ்கா, கனடா மற்றும் ரஷ்யாவின் ஆர்க்டிக் டன்ட்ரா மற்றும் போரியல் காடுகளின் கீழ் உள்ளது.
AFP via Getty Images
இரண்டு குகை சிங்கக் குட்டிகள் மற்றும் ஒரு கம்பளி காண்டாமிருகம் உட்பட, அழிந்துபோன பல விலங்குகளின் மம்மி செய்யப்பட்ட எச்சங்களைப் பாதுகாத்து, அழிந்துபோன பல விலங்குகளின் எச்சங்களை இது ஒரு வகையான டைம் கேப்சூலாகப் பாதுகாக்கிறது.
பெர்மாபிரோஸ்ட் என்பது நல்ல சேமிப்பு ஊடகமாக இருந்ததற்கு காரணம் அதன் குளிர்ச்சி மட்டுமல்ல அது ஒளி ஊடுருவாது,ஓக்சிஜன் இல்லாத ஒரு கால நிலையை கொண்டுள்ளது,ஆனால் தற்போது இருக்கும் நிலையின் படி, பூமியின் மற்ற பகுதிகளை விட 4 மடங்கு அதிகமான வெப்ப காலநிலையை கொண்டுள்ளது.
ஆய்வு பற்றிய வெளியான தகவல்
உறைந்த வைரஸ்களால் ஏற்படும் அபாயங்களை நன்கு புரிந்து கொள்ள, பிரான்சின் மார்சேயில் உள்ள மருத்துவம் மற்றும் மரபியல் துறையின் எமரிட்டஸ் பேராசிரியரான ஜீன் மைக்கல் க்ளேவேரி, சைபீரிய பெர்மாஃப்ரோஸ்டில் இருந்து எடுக்கப்பட்ட பூமி மாதிரிகளை சோதனை செய்தார்.
அதில் உள்ளவை இன்னும் தொற்றுநோயாக உள்ளன. அவர் "zombie வைரஸ்கள்" என்று விவரிக்கும் தேடலில் இருக்கிறார்.
பனிப்பாறைகளினுள்ளே பல வைரசுகள் உறைந்திருப்பதாக விஞ்ஞானிகளால் நம்பப்படுகிறது.ஆகையால் இவை உருகுவதனால் பல ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.எனவும் விஞ்ஞானிகள் மேலும் கூறியுள்ளனர்.
Images AAAS