எல் நினோவால் அடுத்த ஆறு மாதங்களில் 450,000 பேர் உயிரிழக்கலாம்: அறிவியலாளர்கள் கூறும் பகீர் தகவல்
El Niño projected to cause 450,000 deaths in next six months: எல் நினோவால் அடுத்த ஆறு மாதங்களில் 450,000 பேர் உயிரிழக்கலாம் என அறிவியலாளர்கள் கணித்துள்ளார்கள்.
ஏற்கனவே எல் நினோவால் வெப்பம் அதிகரித்துவருவதால் உயிரிழப்போர் எண்ணிக்கை வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், எல் நினோவால் அடுத்த ஆறு மாதங்களில் 450,000 பேர் உயிரிழக்கலாம் என அறிவியலாளர்கள் கணித்துள்ளார்கள்.
அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பை சந்திக்கவிருக்கும் நாடுகள்
அத்துடன், அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பை சந்திக்கவிருக்கும் டாப் 10 நாடுகள் குறித்த பட்டியலும் வெளியாகியுள்ளது.

அந்த பட்டியலில், நைஜீரியா, இந்தோனேசியா, சூடான், இந்தியா, பிரேசில், காங்கோ குடியரசு, நைஜர், சாட், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
அதிகபட்சமாக நைஜீரியாவில் 31,320 பேர் கூடுதலாக உயிரிழக்க இருப்பதாக அறிவியலாளர்கள் கணித்துள்ளார்கள்.
அத்துடன், உணவு விநியோகமும் பாதிக்கப்பட இருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எல் நினோ காரணமாக, சுமார் 50 மில்லியன் மக்கள் கடுமையான பசியால் வாட இருப்பதாகவும், விலைவாசி அதிகரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள் அவர்கள்.
1877க்கும் 1878க்கும் இடையில் உருவான எல் நினோ, 50 மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படக் காரணமாக அமைந்தது. அப்போதும், வறட்சி மற்றும் பஞ்சத்தால் பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.