மாயமான கத்தரிக்கோல்... களேபரமான விமான நிலையம்: ரத்தான விமானங்கள்
ஜப்பானில் விமான நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் இருந்து ஜோடி கத்தரிக்கோல் மாயமானதை அடுத்து 36 விமானங்கள் ரத்தான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
201 விமானங்கள்
கத்தரிக்கோல் விவகாரத்தில் 201 விமானங்கள் அதிகாரிகளால் தாமதப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானின் Hokkaido பகுதியில் அமைந்துள்ள New Chitose விமான நிலையத்தின் உள்ளூர் விமான சேவைகளுக்கான முனையம் சுமார் 2 மணி நேரம் ஸ்தம்பித்தது.
இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளானார்கள். ஏற்கனவே பாதுகாப்பு சோதனைகள் முடிக்கப்பட்ட பயணிகளையும் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தினர்.
மாயமான கத்தரிக்கோலை கண்டுபிடிக்க அதிகாரிகள் தரப்பு தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுத்தனர். ஆனால் இறுதியில், அதே கடையிலேயே மாயமானதாக கூறப்படும் கத்தரிக்கோலை கண்டுபிடித்தனர்.
சனிக்கிழமை பகல் நடந்த இச்சம்பவத்தில், ஞாயிறன்று கத்தரிக்கோல் கண்டுபிடிக்கப்பட்டதாக திங்களன்று அதிகாரிகள் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளனர். மாயமானதாக கூறப்படும் அதே கத்தரிக்கோல் தானா என்பதை உறுதி செய்த பின்னரே, பொதுமக்களுக்கு அறிவித்துள்ளதாகவும், அதனாலையே தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் பலர்
கத்தரிக்கோல் சம்பவத்தால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதும் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமானதும் பயணிகள் பலர் பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே, இதுபோன்ற சம்பவம் இனி ஏற்படாமல் இருக்க நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என Hokkaido விமான நிலைய அதிகாரிகளுக்கு அமைச்சர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் பாதுகாப்பு தொடர்பில் ஜப்பான் நிர்வாகத்தின் அக்கறையே இச்சம்பவம் வெளிக்காட்டுவதாக சமூக ஊடகங்களில் பலர் பதிவிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |