வாங்கிய 2 நாட்களிலேயே ரிப்பேர் ஆன Ola Electric Scooter.., Showroom -யை தீவைத்து கொளுத்திய இளைஞர்
ஓலா எலட்ரிக் ஸ்கூட்டர் ரிப்பேர் குறித்து கேட்ட போது சர்வீஸ் ஊழியர்கள் சரியாக பதிலளிக்காததால் ஓலா ஷோரூமை தீ வைத்து கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது.
எங்கு நடந்தது?
இந்திய மாநிலமான கர்நாடகா, கலபுர்கி (Kalaburagi) நகரில் ஓலா ஷோரூம் (Ola Showroom) ஒன்று இயங்கி வருகிறது.
இங்கு, 26 வயது பைக் மெக்கானிக்கான முகமது நதீம் என்பவர் கடத்த மாதம் ரூ.1.4 லட்சம் கொடுத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஒன்றை வாங்கியுள்ளார்.
ஆனால், அவர் வாங்கிய 2 நாட்களிலேயே எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பேட்டரி மற்றும் சவுண்ட் சிஸ்டமில் தொழில்நுட்ப ரீதியாக கோளாறு ஏற்பட்டது.
இதனால் அவர் அடிக்கடி ஸ்கூட்டரை ரிப்பேர் செய்ய வேண்டி இருந்தது. பின்னர், அவர் தான் வாங்கிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓலா ஷோரூம்க்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் அவருக்கு சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால், கோபத்தில் இருந்த முகமது நதீம் ஷோரூமிற்கு பெட்ரோல் கேனுடன் சென்று தீ வைத்து கொளுத்தியுள்ளார்.
இதனால், ஷோரூமில் விற்பனைக்கு இருந்த 6 வாகனங்கள் மற்றும் கணினிகள் தீயில் எரிந்தன. அதாவது மொத்தம் சுமார் 8.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின.
பின்னர், தீ வைத்து கொளுத்திய முகமது நதீம் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |