தோழிக்கு பிரசவம் பார்த்த பெண்... குழந்தையின் உடலிலும் தன் கணவனின் உடலிலும் இருந்த ஒற்றுமையால் ஏற்பட்ட அதிர்ச்சி
ஆதரவற்ற நிலையிலிருந்த தன் தோழிக்கு தன் வீட்டில் இடம் கொடுத்த ஒரு அமெரிக்கப் பெண், தன் தோழிக்குக் குழந்தை பிறந்தபோது அவருக்கு பிரசவம் பார்த்து, ஒரு தந்தையின் ஸ்தானத்திலிருந்து அந்தப் பெண்ணின் குழந்தையை கவனித்துக்கொண்டிருக்கிறார்.
அரிசோனாவில் வாழ்ந்து வந்த Hailey Custer (28), போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டவர். அவரது நெருங்கிய தோழியும் அவ்வாறே போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டவர் என்பதால் அவருக்கும் தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார் Hailey.
அப்போது அந்த பெண் கர்ப்பமுற, Hailey அவருக்கு உதவ யாரும் இல்லாததால் அவரை பொறுப்பாக கவனித்துக்கொண்டதுடன், அவரது பிரசவத்தையும் கவனித்துக்கொண்டிருக்கிறார்.
குழந்தைக்கு முதல் குளியல் கொடுப்பதிலிருந்து அத்தனையும் கவனித்துக்கொண்ட Hailey, ஒருமுறை தன் தோழியின் குழந்தைக்கு உடை மாற்றும்போது அந்த குழந்தையின் கழுத்தைக் கவனித்திருக்கிறார். அந்த குழந்தையின் கழுத்தில் ஒருவித அசாதாரண கட்டி போன்ற ஒரு வளர்ச்சி இருப்பதைக் கண்ட Hailey திடுக்கிட்டிருக்கிறார்.
காரணம், Haileyயின் கணவரான Travis Bowling, மற்றும் தன் மகனுடைய கழுத்திலும் இதே போன்று ஒரு அமைப்பு இருப்பது அவருக்குத் தெரியும். ஆக, அந்தக் குழந்தையின் தந்தை தன் கணவர்தான் என அப்பட்டமாகத் தெரிய, நிமிர்ந்து தன் தோழியைப் பார்த்திருக்கிறார். உண்மை தெரிந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்ட அந்த பெண் வெட்கித் தலை குனிந்திருக்கிறார்.
அதிர்ச்சியடைந்த Haileyயின் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓட, பின்னர் சில விடயங்களை தீர ஆலோசித்திருக்கிறார் அவர். இப்போது இந்த பிரச்சினையை பெரிதாக்கினால், அது புதிதாக பிறந்த குழந்தையையும் பாதிக்கும், தன் தோழிக்கும் உதவிக்கு யாருமில்லை என்பதை உணர்ந்தவராய் அமைதியாக இருந்துவிட்டாராம் Hailey.
அதற்குப் பிறகு, Haileyக்கு வேறு சில அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் தெரியவந்துள்ளன. தன் கணவனுக்கு தன் தோழியுடன் மட்டுமல்ல, சுமார் 30 பெண்களுடன் தொடர்பிலிருந்துள்ளது என்ற விடயமும் தெரியவந்துள்ளது.
இந்த விடயங்களை சமூக ஊடகம் ஒன்றில் Hailey பகிர்ந்துகொள்ள, அவரது வீடியோ 3.4 மில்லியன் பேரால் பார்வையிடப்பட்டுள்ளது. அதில், நான் என் தோழியை மன்னித்துவிட்டேன், அதனால் எனக்கு பெரும் நிம்மதி கிடைத்தது என்று அவர் கூற, அவருக்கு பலரும் ஆதரவும், அவரது தோழிக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்கள்.
தற்போது Hailey வேறொருவரை மணந்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்துவருவதாக தெரிவித்துள்ளார்.