ஸ்காட்லாந்தின் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் பயங்கரம்: சாலையை தீயிட்டு வெடிகளை வீசிய இளைஞர்கள்
ஸ்காட்லாந்து ஹாலோவீன் கொண்டாட்டத்தில் இளைஞர்கள் சாலைகளுக்கு தீ வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு ஹெலிகாப்டருடன் வந்த காவல்துறை அதிகாரிகள்.
ஸ்காட்லாந்தில் நேற்று நடைபெற்ற ஹாலோவீன் கொண்டாட்டத்தில் இளைஞர்கள் சாலைகளுக்கு தீ வைத்து, பட்டாசுகளை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அக்டோபர் 31ம் திகதி மாலை ஸ்காட்லாந்தின் டன்டீயில் (Dundee) உள்ள பால்கோவன் அவென்யூவில் ( Balgowan Avenue) நடைபெற்ற ஹாலோவீன் கொண்டாட்டத்தில் இளைஞர்கள் சாலைகளுக்கு தீ வைத்ததுடன், அவற்றில் பட்டாசுகளையும் தூக்கி வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் இருந்த கார்கள் மீது செங்கற்கள் வீசப்பட்டதாகவும், இளைஞர்கள் வாகனங்கள் மீது பாய்ந்ததாகவும், அருகில் உள்ள பள்ளியின் ஜன்னல்களை அழித்ததாகவும் பல புகார்கள் வெளியாகின.
Youths set fires and and hurl fireworks during a Halloween rampage in an area of Dundee https://t.co/vhmtZbQWaY pic.twitter.com/yTi3beZPbI
— BBC Scotland News (@BBCScotlandNews) November 1, 2022
இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் தங்கள் ஹாலோவின் உடைகளுடன் தந்திரமாகவோ அல்லது சந்தோஷ கூச்சலிட்டோ இனிப்புகளுக்காக சாலையில் சுற்றி திரிய முடியாமல் போனது.
இளைஞர்களின் அட்டுழியங்கள் குறித்து தகவல் அறிந்த பொலிஸார்கள் சம்பவ இடத்திற்கு ஹெலிகாப்டருடன் விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.
அத்துடன் சம்பவ இடத்திற்கு ஸ்காட்டிஷ் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளும் அழைக்கப்பட்டு தீயிணை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் அப்பகுதியின் ஆபத்தான நிலை காரணமாக உள்ளூர் பொதுமக்கள் அப்பகுதியை தவிர்க்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
Police are dealing with ongoing incidents in the Kirkton area of Dundee.
— Brandon Cook (@brandoncookSTV) October 31, 2022
Videos show roads blocked by fires, cars being damaged, riot police, fireworks being launched towards vehicles. Pictures show smashed windows.@STVNews pic.twitter.com/OwJIhlBcun
பால்கோவன் அவென்யூவில் நடைபெற்ற இந்த பயங்கர சம்பவம் தொடர்பான அச்சுறுத்தும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சாலை தடுப்புகளில் நெருப்பு எரிவதை காட்டுகிறது.
கூடுதல் செய்திகளுக்கு: மறுசுழற்சி ஆலையில் மர்மமாக கிடந்த மனித உடல் பாகங்கள்: பயத்தில் நடுங்கிய பிரித்தானிய தொழிலாளர்கள்
டண்டீயைச் சேர்ந்த அலெக்ஸ் வாக்கர் தெரிவித்த தகவலில், இளைஞர்கள சாலையின் குறுக்கே பட்டாசுகளை தீயின் மீது வீசி வெடிக்க செய்தனர், அதனால் சாலையின் மறுபக்கம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என தெரிவித்தார்.
டண்டீ நகர சபையின் தலைவரான ஜான் அலெக்சாண்டர், ஃபேஸ்புக்கில் ஹாலோவீனில் என்ன நடந்தது என்பதைப் பற்றி கருத்துக்களை வெளிப்படுத்தினார், அதனை பொறுப்பற்ற நடத்தை என்று அழைத்தார்.