18 பாலஸ்தீன ஆதரவாளர்களை கைது செய்த ஸ்கொட்லாந்து
பொலிஸ் நியூ ஸ்கொட்லாந்து யார்டிற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட 18 பாலஸ்தீன ஆதரவாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
18 பேர் நியூ ஸ்கொட்லாந்து யார்டுக்கு வெளியே
ஸ்கொட்லாந்து காவல்துறை அதிகாரிகள் தடைசெய்யப்பட்ட குழுவின் ஆதரவாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை மீண்டும் தொடங்குவதாக உறுதியளித்தது.
அதனைத் தொடர்ந்து, மெட் காவல்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "பயங்கரவாத சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட அமைப்பான பாலஸ்தீன ஆக்ஷனுக்கு ஆதரவாக, 18 பேர் நியூ ஸ்கொட்லாந்து யார்டுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் அங்கு உள்ளனர்; விரைவில் கைது நடவடிக்கைகள் தொடங்கும்" என்று கூறியது.
ஆனால், நேரடி ஆக்ஷன் குழு மீதான தடை சட்டவிரோதமானது என்று கடந்த மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததால், பாலஸ்தீன ஆக்ஷன் நடவடிக்கை ஆதரவாளர்களை கைது செய்வதை மெட் காவல்துறை நிறுத்தியது.
சாத்தியமான வழக்குகளுக்காக
அதே சமயம், பயங்கரவாத சட்டத்தின் கீழ் இதுபோன்ற குற்றங்களுக்காக மக்களை கைது செய்வதை நிறுத்துவதாகவும், ஆனால் எதிர்காலத்தில் சாத்தியமான வழக்குகளுக்காக ஆதாரங்களை சேகரிப்பதாகவும் கூறியது.
இந்த நிலையில், அறிக்கையின்படி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 18 பாலஸ்தீன ஆக்ஷன் ஆதரவாளர்களை காவல்துறை கைது செய்துள்ளது. மெட்ரோபொலிதன் காவல்துறை ஒரு எக்ஸ் பதிவில் இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், தனது அமலாக்க அணுகுமுறையை திருத்தியமைத்துள்ளதாகவும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கை ஒரு 'இடைக்கால நிலைப்பாடு' என்றும் காவல்துறை கூறியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |