ஸ்கொட்லாந்து முன்னாள் முதல் அமைச்சரின் கணவருக்கு சிறைத்தண்டனை
ஸ்கொட்லாந்து முன்னாள் முதல் அமைச்சரின் கணவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
முதல் அமைச்சரின் கணவருக்கு சிறைத்தண்டனை
2014ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை, 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்கொட்லாந்தின் முதல் அமைச்சராக பதவி வகித்தவர் நிக்கோலா ஸ்டர்ஜன்.

நிக்கோலாவின் கணவர் பீற்றர் முர்ரெல் (61). 15 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பின் இருவரும் பிரிவதாக 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்தார் நிக்கோலா.
2001ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டுவரை ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் தலைமை நிர்வாகியாக பொறுப்பு வகித்துவந்தவர் பீற்றர்.
விடயம் என்னவென்றால், தன் பதவியை பயன்படுத்தி, கட்சி நிதியிலிருந்து சுமார் 400,000 பவுண்டுகளுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளார் பீற்றர்.

தன் மனைவி முதல் அமைச்சராக இருக்க, 12 ஆண்டுகளாக, அவருக்குத் தெரியாமலே பணத்தை எடுத்து ஆடம்பரமாக செலவு செய்துவந்துள்ளார் பீற்றர்.
2025ஆம் ஆண்டு பீற்றர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அவருக்கு ஐந்து ஆண்டுகள் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ளார் அவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |