ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி!
நிலநடுக்கத்திற்கு மத்தியில் ரஷ்யாவின் குரில் தீவுகளில் பாறைகள் சரிவுகளில் இருந்து ஸ்டெல்லர் கடல் சிங்கங்கள் தப்பிக்கும் பரபரப்பான காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
ரஷ்ய கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையை ஒட்டி 8.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
A tsunami has hit coastal areas of Russia’s Kuril Islands and Japan’s large northern island of Hokkaido after a powerful, 8.8-magnitude earthquake struck off the coast of Russia early Wednesday.https://t.co/TeZYSHDErF https://t.co/qe6XcOnjY6 pic.twitter.com/romsWyq4Fx
— Pure Guava (@pureguava10300) July 30, 2025
இந்த நிலநடுக்கத்தால் 4 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் எழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக பசிபிக் பெருங்கடலின் மறுபக்கத்தில் உள்ள ஹவாயிலும் அதன் தாக்கம் உணரப்பட்டது. ஹவாய் மாகாண ஆளுநர் ஜோஷ் க்ரீன், ஹவாயில் 4 முதல் 6 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் பதிவாகியுள்ளதாகவும், பல பகுதிகளில் கடல் உள்வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்!
கடல் சிங்கங்களின் பரபரப்பான தப்பித்தல்
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, ரஷ்யாவின் குரில் தீவுகளில் பாறைகள் சரிந்ததால், ஸ்டெல்லர் கடல் சிங்கங்கள் (Steller sea lions) அங்கிருந்து தப்பிக்கும் பரபரப்பான காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.
🚨Dozens of Steller sea lions flee tsunami waves on Russia’s Antsiferov Island, captured in striking footage#Russia #earthquake #Tsunami #Hawaii #California #Japan #kuril #TsunamiVideo pic.twitter.com/Bmrs4DSi2k
— TheWarPolitics 🇮🇳 (@TheWarPolitics0) July 30, 2025
பேராசிரியர் குரோமோவ் (Professor Khromov) கப்பலின் ஊழியர் நிகிதா சின்சினோவ் (Nikita Sinchinov) எடுத்த இந்த வீடியோவில், நிலநடுக்கத்தால் பாறைகள் சரிவதை தவிர்ப்பதற்காக கடல் சிங்கங்கள் கொந்தளிப்பான கடலுக்குள் குதிப்பது பதிவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |