நீல நிறத்தில் ஒளிரும் கடல்: மும்பை அருகே ஒரு அரிய காட்சி
Sea mysteriously glows blue at night off Arnala beach near Mumbai: மும்பை அருகிலுள்ள கடல் ஒன்று இரவு நேரத்தில் நீல நிறத்தில் ஒளிர்கிறது.
மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள மும்பையின் அருகே அமைந்துள்ள கடல் ஒன்றின் நீர், இரவு நேரத்தில் நீல நிறத்தில் ஒளிரும் காட்சிகள் வைரலாகிவருகின்றன.
நீல நிறத்தில் ஒளிரும் கடல்
மும்பை அருகிலுள்ள அர்னாலா என்னுமிடத்தில் அமைந்துள்ள கடல் நீர், இரவு நேரத்தில் நீல நிற மின்மினிப்பூச்சிகள் நீந்துவதைபோல் ஒளிர்வதைக் கண்டு அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளார்கள்.

உயிரி ஒளிர்தல் அல்லது bioluminescence என்னும் நிகழ்வு இதற்குக் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
அதாவது, கடல்வாழ் உயிரினங்களுக்கு இயற்கையாகவே ஒளியை உமிழும் திறன் உண்டு. Plankton எனப்படும் ஒருவகை நுண்ணுயிரிகள், தங்களுக்கு அருகிலுள்ள நீர் அசையும்போது இப்படி நீல நிற ஒளியை உமிழ்வதுண்டு.
என்றாலும், அர்னாலா கடலில் காணப்படும் இந்த நிகழ்வுக்கு Planktonதான் காரணம் என்பது உறுதிசெய்யப்படவில்லை.