பிரான்சில் சிவப்பாக மாறிய கடல்: அறிவியலாளர்கள் விளக்கம்
Sea turned red in part of Brittany: பிரான்சின் பிரிட்டனி பகுதியில், கடல் சிவப்பு நிறமாக மாறியதால் மக்கள் வியப்பிலாழ்ந்துள்ளனர்.
கடந்த மாதத்தின் சில நாட்களில் பிரிட்டனி பகுதியில் கடல் நீர் சிவப்பாக மாறியிருப்பதைக் கண்ட மக்கள், அது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அறிவியலாளர்கள் விளக்கம்
அறிவியலாளர்கள் அந்த பகுதியிலிருந்து தண்ணீரை சேகரித்து ஆய்வுக்குட்படுத்தினர்.

அப்போது, கடல் நீர் சிவப்பாக மாற, Rytiphlaea tinctoria என்னும் கடல் பாசிதான் காரணம் என தெரியவந்தது.
இந்த கடல் பாசியில் rytiphline என்னும் சிவப்பு நிறமி உள்ளது. சமீபத்திய நாட்களில் நிலவிய பருவநிலை காரணமாக பெருமளவில் அந்த கடல் பாசி கரையொதுங்கிய நிலையில், அது அழுகத் துவங்க, பாசியிலிருந்து சிவப்பு நிறமி வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கடல் நீரின் சிவப்பு நிறத்துக்குக் காரணமான அந்த நிறமியால் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், ரோமர்கள் காலத்தில், அவர்கள் இந்த Rytiphlaea tinctoria பாசியிலிருந்து எடுக்கப்படும் நிறமியை மேக் அப் மற்றும் டைகளில் பயன்படுத்தியுள்ளார்கள்!