சீமான் உடைத்த ரகசியம்! நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேர்வு குறித்த கேள்விக்கு விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் எப்படி தெரிவு செய்யப்படுகின்றனர் என்பது குறித்த ரகசியத்தை உடைத்துள்ளார். தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்காக அனைத்து கட்சிகளும் மும்பரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருவதுடன், கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்து வருகிறது. அதன் படி இந்த முறையும், சீமானின் நாம் தமிழர் கட்சி கூட்டணி இன்றி தனித்து போட்டியிடுகிறது.
234 தொகுதிகளில், 117 ஆண்கள், 117 பெண்கள் என போட்டியிடுகின்றனர்.
அரசியலை லாபம் பெறும் தொழிலாக மாற்றி விட்டனர்.
— FX16 News (@fx16news) March 7, 2021
கட்சிகளை குடும்ப சொத்துக்களாக மாற்றி விட்டனர். மாற்றத்திற்கான அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கிறது!
பெண்களுக்கு 50% கொடுப்பது எங்கள் கடமை. ஆணும், பெண்ணும் சமம் என்பதே எங்கள் கொள்கை - சீமான்#Seeman @NaamTamilarOrg #NTK4Tamilnadu pic.twitter.com/amJX4Kx56L
இந்நிலையில், இந்த தேர்தல் மற்றும் வாக்காளர்கள் தெரிவு குறித்தும், ஏற்கனவே எங்கள் கட்சியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களே அடுத்த முறை தேர்தலிலும் போட்டியிடுவார்கள் என்று கூறினேர்கள், ஆனால் இந்த முறை 170-க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், எங்கள் கட்சியில் யாரும் வெளியேறவில்லை, எல்லோரும் இருக்கிறார்கள். அவர்கள் விட்டுகொடுக்க போய் தான் இந்த வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
கொரோனா காலத்திலேயே ஒன்றரை லட்சம் பேர் எங்கள் கட்சியில் இணைந்திருக்கிறார்கள். குறிப்பாக காளியம்மா என்று எங்கள் கட்சியில் புதிதாக இணைந்த பெண்ணை நான் கட்டாயப்படுத்தி தான் இழுத்து வந்தேன்.
ஏன் என்றால், அவர் ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு மீனவர்களுக்காக போராடிகிட்டு இருந்தார். ஒரு போராட்டக் களத்தில் சந்திக்கும்போது, அவள் பேச்சை கவனித்தேன்.நீ எங்கே இதை எல்லாம் பேசணும்னு நினைக்கிறாய் என்று நான் அவள்கிட்ட கேட்டேன்.
உடனே அவள் சட்டசபை, பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என்று சொன்னாள். உடனே நான், சரி வா, அண்ணன் கூட வா என்று நான்தான் அவளை கூட்டிட்டு வந்தேன். அப்போ அந்த இடத்தில் அவளைதானே நான் நிறுத்த வேண்டும்.
மற்றொரு தங்கை சிவசங்கரி, எங்க ஐடி தொழில் நுட்ப பிரிவில் இருக்கிறார். அவளையும் அப்படித்தான்.. தேடி தேடி தான் கட்சிக்கு அழைத்து வந்தேன்.
என் தம்பி வெற்றிக்குமரனில் இருந்து எல்லாரும் அதே வேட்பாளர்கள்தானே இந்த முறையும் நிற்கிறார்கள்.
நின்னவங்களே இப்பவும் நிக்கறோம். புதிதாக வருபவர்களுக்கும் வாய்ப்பு தரணும்தானே? தகுதியானவர்களை அடையாளப்படுத்தி மக்கள் முன்னாடி நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.அதுதான் என் வளர்ச்சிக்கும் அது சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.


