பின்வாங்கினார் சீமான்.. ஸ்டாலினை எதிர்த்து போட்டியில்லை? அவர் நிற்கும் தொகுதி குறித்து கசிந்த முக்கிய தகவல்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் திகதி அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஒரு மாத காலமே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், மார்ச் 7ம் திகதி சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளனர், 234 பேரில் 117 ஆண், 117 பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, திமுக ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ அந்த தொகுதியில் போட்டியிடுவேன் என கூறி வந்த சீமான், திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சட்டமனற்த் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் திருவெற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்ததால், சீமான் அந்த தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.