ஹெட்மையரின் ரன்வேட்டையை முடித்த மேக்ஸ்வெல்! 82 ரன்னுக்கு சுருண்ட அணி..இமாலய வெற்றி
சியாட்டல் ஓர்கஸ் அணிக்கு எதிரான போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.
மேக்ஸ்வெல் மிரட்டல்
புளோரிடாவில் நடந்த மேஜர் லீக் போட்டியில் மேக்ஸ்வெலின் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் சியாட்டல் ஓர்கஸ் அணிகள் மோதின.
Another Klaas-ic 🔥
— Seattle Orcas (@MLCSeattleOrcas) July 5, 2025
Short ball sent long 😎#SeattleOrcas #AmericasFavoriteCricketTeam #MLC2025 #WFvSO | @MLCricket pic.twitter.com/YEcZB1o5VA
முதலில் களமிறங்க சியாட்டல் அணி க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell), நேத்ரவால்கர் மற்றும் ஜேக் எட்வர்ட்ஸின் மிரட்டலான பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தது.
ஹெய்ன்ரிச் கிளாஸன் மட்டும் போராட, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க சியாட்டல் அணி 82 ஓட்டங்களுக்கு சுருண்டது. கிளாஸன் (Klaasen) 39 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் விளாசினார்.
ரச்சின் ரவீந்திரா அபாரம்
மேக்ஸ்வெல், நேத்ரவால்கர், எட்வர்ட்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், ரச்சின் ரவீந்திரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய வாஷிங்டன் அணி 9.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 86 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
All we need is a little bit of Glenn Maxwell bowling 🫶#FreedomExpress #MLC2025 | @Gmaxi_32 pic.twitter.com/day9ynOJ9W
— Washington Freedom (@WSHFreedom) July 5, 2025
முக்தார் அகமது ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள் எடுத்தார். ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) 23 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் விளாசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |