ஜாம்பவானின் 49 ஆண்டுகால சாதனை: தூளாக நொறுக்கிய ஜெய்ஸ்வால்
இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ஓட்டங்கள் இந்திய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை எட்டியுள்ளார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது.
இந்திய அணியின் முதல் இன்னிங்சில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) 13 பவுண்டரிகளுடன் 87 (107) ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ஓட்டங்கள் எடுத்த சுனில் கவாஸ்கரின் 49 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
ஜாம்பவான்களுடன் முதலிடத்தில்
சுனில் கவாஸ்கர் 23 டெஸ்ட்களில் 2000 ஓட்டங்களை எட்ட, ஜெய்ஸ்வால் 21வது டெஸ்ட்டிலேயே (40 இன்னிங்ஸ்) எட்டிவிட்டார்.
மேலும், இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராகுல் டிராவிட், விரேந்தர் சேவாக் ஆகியோருடன் தனது இடத்தையும் ஜெய்ஸ்வால் பகிர்ந்து கொண்டார்.
ஜெய்ஸ்வால் இதுவரை 5 சதங்கள் (இரண்டு இரட்டை சதங்கள் உட்பட) மற்றும் 11 அரைசதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |