அதானி குழுமத்தின் 6 நிறுவனங்களுக்கு வந்த சிக்கல்
பிரபல தொழிலதிபர் கௌதம் அதானியின் ஆறு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு Sebi நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விளக்க நோட்டீஸ்
இந்தியாவின் இரண்டாவது பாரிய கோடீஸ்வரராக இருப்பவர் கௌதம் அதானி. இவரது அதானி குழுமம், ஹிண்டன்பர்க் விவகாரத்தில் சிக்கிய நிலையிலும் அடுத்தடுத்து கடன் வாங்கி, முதலீடு செய்து வருகிறது.
இந்த நிலையில் Sebi அதானி குழுமத்தின் 6 நிறுவனங்களுக்கு விளக்க நோட்டீஸ் (Show-cause notice) அனுப்பியுள்ளது.
விதிமுறைகளை மீறிய நிறுவனங்கள் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது? ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணங்களை நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கும் முறை தான் இந்த நோட்டீஸ்.
பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான Sebi பரிவர்த்தனை விதி மீறல், பட்டியலிடும் விதிகளை மீறுதல் உள்ளிட்டவை குறித்து நேரில் விளக்கம் அளிக்க கேட்டு Show-Cause நோட்டீசை அனுப்பியது.
அதானி குழுமம் இந்த நோட்டீஸ் குறித்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அளித்த விளக்கத்தில், 'அதானி குழும நிறுவனங்கள் தொடர்புடைய தரப்புகளின் பரிவர்த்தனை விதி மீறல், பட்டியலிடும் விதிகளை மீறுதல் மற்றும் கடந்த காலத்தில் தணிக்கையாளர் சான்றிதழ்களின் Validity ஆகிய குற்றங்களை சார்ந்தது' என விளக்கம் அளித்துள்ளது.
பாதிக்க வாய்ப்பில்லை
மேலும் அதானி குழுமம் கூறுகையில், ''நாங்கள் பெற்ற சட்ட ஆலோசனைப்படி, ஒழுங்குமுறை ஆணையத்தின் நோட்டீஸ்கள் நிறுவனங்களைப் பாதிக்க வாய்ப்பில்லை'' என தெரிவித்துள்ளது.
அத்துடன் இதன் வாயிலாக, எதிர்கால நிதி அறிக்கைகளை பாதிக்கக்கூடும் எனவும் அதானி குழுமத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பெர்க் நிறுவனம் சுமத்திய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து Sebi இந்த விசாரணையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |